வைரலாகும் மேட்ரிமோனியல் விளம்பரம், அப்படி என்னதான் இருக்கு அந்த விளம்பரத்தில்?

மேற்கு வங்கத்தில் ஒருவர் தனக்கு பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் உள்பட எந்த சமூக ஊடகத்திற்கு அடிமையாகாத பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.

Last Updated : Oct 6, 2020, 02:39 PM IST
    1. இந்த விளம்பரத்தை பார்த்து பல ஆண்கள், இப்படி ஒரு பெண் தேடினா, இந்த ஜென்மத்தில் உங்களுக்கு கல்யாணமே ஆகாது என்று கலாய்த்து வருகின்றனர்.
    2. மேற்கு வங்கத்தில் ஒருவர் தனக்கு பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் உள்பட எந்த சமூக ஊடகத்திற்கு அடிமையாகாத பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.
வைரலாகும் மேட்ரிமோனியல் விளம்பரம், அப்படி என்னதான் இருக்கு அந்த விளம்பரத்தில்?

மேற்கு வங்கத்தில் ஒருவர் தனக்கு பேஸ்புக் (FaceBook), யூடியூப் (Youtube), ட்விட்டர் (Twitter) உள்பட எந்த சமூக ஊடகத்திற்கு அடிமையாகாத பெண் வேண்டும் என்று மேட்ரிமோனியல் (Matrimonial) விளம்பரம் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.

இந்த விளம்பரத்தை பார்த்து பல ஆண்கள், இப்படி ஒரு பெண் தேடினா, இந்த ஜென்மத்தில் உங்களுக்கு கல்யாணமே ஆகாது என்று கலாய்த்து வருகின்றனர். மேற்கு வங்கத்தின் கமர்புகூரைச் சேர்ந்த ஒருவர் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். 

 

ALSO READ | கர்நாடகாவில் ஜே.சி.பி. வாகனத்தில் திருமண ஊர்வலம்! வைரல் புகைப்படம்!

அந்த விளபரத்தில், "சாட்டர்ஜி 37/5'7" யோகா பயிற்சியாளர், அழகானவர், நியாயமானவர், எதற்கும் அடிமையாகாதவர், உயர் நீதிமன்றத்தில் வக்கீல் மற்றும் ஆராய்ச்சியாளர். அவரிடம் கார் உள்ளது, பெற்றோர் உள்ளனர். கமர்புகூரில் கிராம வீடு உள்ளது, எதையும பெண்ணிடம் எதிர்பார்க்கவில்லை இல்லை, மணமகள் நியாயமான, அழகான, உயரமான, ஒல்லியானவராக இருகக வேண்டும். முக்கியமாக மணமகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது என்று தெரிவிக்கபத்துள்ளது. 

இந்த வைரல் விளபரத்தை நிதின் சங்வான், ஐ.ஏ.எஸ்.,செய்தித்தாள் பேப்பர் கட்டிங்கை பகிர்ந்து அதை ட்விட்டரில் தலைப்பிட்டு, "வருங்கால மணமகள் / மணமகன்களே, தயவுசெய்து கவனம் செலுத்துங்கள். திருமணம் செய்வதற்கான போட்டி அளவுகோல்கள் மாறி வருகின்றன. " என்று பதிவிட்டுள்ளார்.

நிதின் சாங்வானின் ட்விட்டர் பதிவை கிட்டத்தட்ட 1,000க்கும் மேற்பட்டோர் லைக்குகள் மற்றும் ரீட்வீட் செய்துள்ளனர். 

 

ALSO READ | இந்த காரணங்கள் திருமண தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

More Stories

Trending News