அடுத்த 15 நாட்களுக்கு திருப்பதி ஏழுமலையான் தரிசனம் கிடையாது: தேவஸ்தானம்

தற்போது திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் இருந்து ன்பதிவு செய்திருந்த பக்தர்கள் திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் வரை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 1, 2021, 07:39 PM IST
அடுத்த 15 நாட்களுக்கு திருப்பதி ஏழுமலையான் தரிசனம் கிடையாது: தேவஸ்தானம்

சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதால் திருப்பதிக்கு (Tirupati Temple) வருவதை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் வரை தள்ளி வைக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் முன்பதிவு செய்த அதே டிக்கெட்டில் 10-15 நாட்களுக்கு பின் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் (Tirupati Devasthanam) தெரிவித்துள்ளது.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில், பெரிய பாறை சரிந்து விழுந்ததால் மண்சரிவு ஏற்பட்டதால், அந்தப் பாதை மோசமடைந்துள்ளது. அதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களில் இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதால், பக்தர்கள் இந்த வழியாக பயணம் மேற்கொண்டால் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் போர்க்கால அடிப்படையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.  

ALSO READ | பணக்காரர் ஆக வேண்டுமா? கனவை நனவாக்க, கண்டிப்பாக இதை செய்யுங்கள்

தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (Indian Institute of Technology) நிபுணர்கள் குழு இன்று (புதன்கிழமை) நிலச்சரிவால் சேதமடைந்த திருமலை மலையின் காட் சாலைகளை ஆய்வு செய்கிறது. "அடுத்த இரண்டு நாட்களில் இக்குழுவினர் அப்பகுதிகளை ஆய்வு செய்து, நிலச்சரிவைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும்" என்று TTD தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி (TTD Chairman YV Subba Reddy) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் (Tirumala Hills) கோவிலுக்கு செல்லும் வழியில் கடும் மண் சரிவு ஏற்பட்டதை அடுத்து, கோயிலுக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் இருந்து ன்பதிவு செய்திருந்த பக்தர்கள் திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் வரை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ | திருப்பதியில் முடி தானம் செய்யும் வழக்கம் எப்படி தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News