காதல் தோல்வியை வாழ்க்கையாக வைத்திருக்கும் 4 ராசிகள்..!

காதலிப்பது என்பது இரு மனங்கள் சார்ந்தது என்றாலும், ராசியின் அடிப்படையிலும் சிலருக்கு காதல் செட் ஆகுமா? ஆகாதா? உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 01:56 PM IST
காதல் தோல்வியை வாழ்க்கையாக வைத்திருக்கும் 4 ராசிகள்..! title=

சில ராசிக்காரர்களுக்கு சட்டென காதலி அமைந்தாலும், பட்டென பறந்து செல்வது வாடிக்கையாக இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை எவ்வளவு அடிவாங்கினாலும், நல்ல உறவைத் தேடி காதலிக்க வேண்டும் என்பதற்காக எத்தனை முறை காதலில் தோல்வியடைந்தாலும், திரும்ப திரும்ப காதலிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். 

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நல்ல உறவை தக்கவைத்துக் கொள்வதில் இயல்பிலேயே சில பிரச்சனைகள் இருக்கிறது. அவர்கள் தாங்கள் விரும்பியவர்களை எவ்வளவு முயற்சி எடுத்து தக்க வைக்க விரும்பினாலும், ஒரு கட்டத்தில் உங்களுடனான ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியேறிவிடுவார்கள். அவர்கள் செய்வது உங்களுக்கு தவறாக தெரிந்தாலும், காயத்தை மறந்து புதிய உறவை தேடிக் கொள்வீர்கள். திருமணத்துக்கு முன்பு காதலில் அடிப்பட்ட அனுபவம் நிறைய உங்களுக்கு இருக்கும். 

ALSO READ | ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க 

கன்னி 

காதல் ராசி என பொதுவாக சொல்லப்படுவதுண்டு. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கன்னி ராசிக்காரர்களுக்கு காதல் எளிதாக அமைந்துவிடும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், ஒரு காதலை தக்க வைக்க இவர்கள் படும் பாடு இவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். இவர்களிடம் இருக்கும் வசீகரத்தை விரும்புபவர்கள், தொடர்ந்து காதலில் இருக்க விரும்புவதில்லை. சரியாக சொல்ல வேண்டுமானால் தங்களை அவர்கள் காதலிக்கிறார்கள் என நீங்களே முன்முடிவு எடுத்துக்கொள்வதால் உறவு முறிவை அதிகம் எதிர்கொள்கிறீர்கள்.

ரிஷபம்

வாழ்க்கையில் மனச்சிக்கலை எதிர்கொள்ளும் அவர்கள், ரிலேஷன்ஷிப்பில் தங்களால் முடிந்ததை கொடுக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், உங்களின் பார்டனர் நீங்கள் கொடுக்க விரும்புவதை விட அதிகம் எதிர்பார்ப்பதால் ஏற்படும் சிக்கலால் காதல் உறவு நீடிப்பதில்லை. உங்களுக்கு பிடித்த உறவை எவ்வளவு முயற்சி செய்து தக்க வைக்க நினைத்தாலும், அடுத்த உறவை நோக்கி சென்றுவிடுவார்கள். ரிஷப ராசிக்காரர்கள் எதிர்கொள்ளும் பொதுவான சிக்கல்.

ALSO READ | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும்; பண வரவு உண்டாகும்
விருச்சிகம்

காதலிப்பதில் எந்தவொரு முன்முடிவு எடுக்கமால் விருச்சிக ராசிக்காரர்கள் எடுக்கும் முடிவு ஆபத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. இதனால், சில மாதங்கள், சில வாரங்களில் காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுகிறது. உங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் குறைபாடுகளை கண்டறிய முயற்சி செய்தால், காதலை தக்க வைக்கலாம். உண்மை என்னவென்றால், அதனை செய்யாமல் பல காதல்களை நோக்கி பயணிக்கிறீர்கள்.

\

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News