இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: கேது மாற்றம் கேடு விளைவிக்கும், எச்சரிக்கை தேவை

Ketu Transit 2022: கேதுவின் மாற்றத்தால் 7 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வித பாதிப்புகள் ஏற்படும். கேதுவின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 20, 2022, 07:50 AM IST
  • கேதுவின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிக்கலை உருவாக்கும்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு கேது சஞ்சார காலத்தில் மன அமைதி கெடும்.
  • மீன ராசிக்காரர்கள் செய்யும் வேலை மற்றும் தொழிலில் வெற்றி எளிதில் கிடைக்காது.
இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: கேது மாற்றம் கேடு விளைவிக்கும், எச்சரிக்கை தேவை  title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. கிரகங்களின் நிலை மோசமாக இருக்கும்போது சுப மற்றும் அசுப விளைவுகள் இரண்டும் காணப்படுகின்றன. அதனால் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் நிகழ்கின்றன. 

ஜாதகத்தில் நிழல் கிரகமான கேதுவின் மோசமான நிலை காரணமாக வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். கேது ஏப்ரல் 12, 2022 அன்று துலா ராசிக்குள் நுழைகிறார். கேதுவின் இந்த மாற்றத்தால் 7 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வித பாதிப்புகள் ஏற்படும். கேதுவின் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம்

கேதுவின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிக்கலை உருவாக்கும். இந்த நேரத்தில் நீங்கள் தோல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூட்டுத் தொழிலில் பங்குதாரருடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இதனால் வியாபாரத்தில் நிதி நிலை பாதிக்கப்படலாம்.

ரிஷபம்

கேது சஞ்சாரத்தின் போது மனரீதியான பிரச்சனைகள் வரலாம். மேலும், தோல் தொடர்பான சில பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது, ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள். சாலையைக் கடக்கும்போது அல்லது வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். 

சிம்மம்

கேது சஞ்சார காலத்தில் மன அமைதி கெடும். குடும்ப உறுப்பினர்களுடன் சில விஷயங்களில் சண்டைகள் வரலாம். இந்த நேரத்தில், எந்தவொரு நிதி முதலீட்டையும் தவிர்க்கவும், இல்லையெனில் இழப்பு ஏற்படலாம்.

மேலும் படிக்க | பிப்ரவரி 27 முதல் சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசிகள்! ரிஷபத்திற்கு சூப்பர் யோகம் 

துலாம்

கேது சஞ்சாரத்தின் போது நீங்கள் அதிக மன சோர்வை உணரலாம். குடும்ப விஷயங்களில் கவலை இருக்கலாம். இந்த காலத்தில் புதிதாக எதையும் செய்வது நல்ல பலனைத் தராது. துலா ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படும்.

விருச்சிகம்

கடினமாக உழைத்தாலும், கேது பெயர்ச்சி காலத்தில் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்காது. மாணவர்கள் பாடத்தை புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள். குடும்பத்தில் தகராறு ஏற்படலாம்.

தனுசு 

தனுசு ராசிக்காரர்கள் கேது சஞ்சாரத்தின் போது தேவையில்லாமல் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். இதனால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தினசரி வருமானம் பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் பணம் சிக்கிக்கொள்ளலாம். ஆகையால் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மீனம்

நீங்கள் செய்யும் வேலை மற்றும் தொழிலில் வெற்றி எளிதில் கிடைக்காது. உங்களை நிரூபிக்க கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். கேது பெயர்ச்சி காலத்தில் தோல் நோய்களின் தொல்லை வரக்கூடும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்ககளுக்கு சவாலாக இருக்கலாம், ஜாக்கிரதை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News