திருமணம் என்பது இருமனம் இணையும் நிகழ்வு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் வாழ் நாள் முழுக்க அவருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற வாக்குறுதியை எடுத்துக்கொண்டு, ஏற்றுக்கொள்ளும் ஒரு உறவாகும். இந்த உறவின் ஆரம்பத்தில் இருக்கும் உற்சாகமும், மகிழ்ச்சியும் வருடங்கள் கடந்த பிறகு காணாமல் போய் விடுவதாக பலர் நினைப்பதுண்டு. ஒரு சிலர், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் புதுமன தம்பதிகள் போலவே இருப்பர். இவர்களுக்குள் ஏதாே ஒரு மேஜிக் இருப்பதாக பலர் நினைத்து கொள்வர். அந்த மேஜிக்கை, நாமும் முயற்சி செய்தால் நம் வாழ்விலும் இணைத்துக்கொள்ளலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
மகிழ்ச்சியான திருமணத்திற்கான டிப்ஸ்:
இன்றைய உலகில், உறவை வலுப்படுத்தவும் அதை மகிழ்ச்சிக்குறியதாக மாற்றவும் யாரும் முயற்சிகள் மேற்கொள்வதில்லை. திருமண உறவில் பல சிக்கல்கள் வரலாம். ஆனால், அவை அனைத்தையும் தம்பதிகள் ஒன்றாகவே எதிர்கொள்ள வேண்டும். இருவருக்குள்ளும் பரஸ்பர புரிதல் இருப்பது நல்ல உறவுக்கான தொடக்கமாக அமையும்.
ஒரு வளமான திருமணத்திற்கு அடிப்படையானது பயனுள்ள வகையில் இருவரும் பேசிக்கொள்வதாகும். உங்கள் பார்ட்னர் குறித்து புரிந்து கொள்வதற்கு, அவருடைய எண்ணங்களும் உணர்வுகளும் உங்களுடன் ஒத்துப்போனவையாக இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் ஒருவர் மீது ஒருவருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கு உங்களுக்கு இடம் கிடைக்கும். இதனால், திருமண உறவில் எப்போதும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நீடிக்கும்.
ஒன்றாக நேரம் செலவிடுதல்..
அன்றாட வாழ்க்கையின் சலசலப்புகளுக்கு மத்தியில், ஒருவருக்கொருவர் தரமான நேரத்தை ஒதுக்குவது அவசியம். இரவு டின்னரை ஒன்றாக சாப்பிடுவது, ஒன்றாக சுற்றுலா செல்வது, உங்களுக்கு பிடித்த விஷயங்களை ஒன்றாக செய்வது போன்றவை உங்கள் உறவை வலுப்படுத்த உதவும். இது, உணர்வு ரீதியாகவும் உங்களை பிணைப்புடன் வைத்திருக்க உதவும்.
பரஸ்பர மரியாதை:
ஒருவருக்கொருவர் அவரவர்களின் தனித்துவத்தை அங்கீகரிப்பதும் பாராட்டுவதும் திருமண உறவில் மிகவும் முக்கியமாகும். உங்கள் பார்ட்னரின் தனித்துவத்தைத் புகழ்வது, அவர்களின் திறமையை ஊக்கு விப்பது போன்ற விஷயங்கள் இருவருக்குள்ளும் மரியாதையை அதிகரிக்க உதவும். இது, இரு நபர்களும் மதிப்புமிக்கவர்களாகவும் புரிந்துகொள்ளப்பட்டவர்களாகவும் உணரும் சூழ்நிலையை உருவாக்குகிறது.
நம்பிக்கை மற்றும் நேர்மை:
எந்தவொரு நீடித்த உறவுக்கும் அடித்தளமாக செயல்படுவது, நம்பிக்கையும் நேர்மையும்தான். உங்கள் துணையுடன் நேர்மையான உரையாடல்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதலை உருவாக்க உதவும். இருவருக்கும் பேச தயக்கமான, கடினமான விஷயங்களைப் பேசும்போது கூட, நம்பிக்கையை வளரும். மேலும் இதனால் திருமணத்தில் பாதுகாப்பு உணர்வும் அதிகமாகும்.
மேலும் படிக்க | தொப்பையை குறைக்க வேண்டுமா? ‘இந்த’ 5 உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!
பகிரப்பட்ட மதிப்புகள்:
பொதுவான குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் தம்பதிகள் பெரும்பாலும் வலுவான, நீடித்த திருமண வாழ்க்கையை வாழ இயலும். ஒரே மாதிரியான லட்சியங்கள் மற்றும் முக்கிய நம்பிக்கைகளை சீரமைப்பது உறவுக்கான நோக்கத்தையும் நல்ல உணர்வுகளையும் விதைக்கும்.
பொருந்தக்கூடிய தன்மை:
திருமண வாழ்க்கையில் கணிக்க முடியாத தன்மை மற்றும் தவிர்க்க முடியாத சவால்கள் வரலாம். இதை தம்பதிகள் இருவருமே சேர்ந்து எதிர்கொள்வது மிகவும அவசியம். உங்கள் பார்ட்னருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என தெரிந்து கொள்வது, அவருக்கு பிடிக்காத விஷயங்களை குறைத்துக்கொள்வது போன்றவை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உதவும். இவை உறவில் பிளவுகளை உருவாக்க விடாமல், தடுக்கவும் செய்யும்.
பாராட்டுகளை தெரிவிப்பது:
உங்கள் வாழ்க்கை துணை உங்களை மகிழ்விப்பதற்காக ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளும் போது அவருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தவறாமல் வெளிப்படுத்துவது ஆழ்ந்த திருமண உறவில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பது, உணர்வு ரீதியான தொடர்பை மேம்படுத்துகிறது . மேலும் திருமணத்தில் நேர்மறையான சூழ்நிலையை வளர்க்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ