Car Driving Tips: ஓடும் காரில் பிரேக் பழுதானால் என்ன செய்வது? முக்கிய டிப்ஸ் இதோ

காரின் பிரேக் பழுதடைந்தால், அதற்கு முன், பொதுவாக நமக்கு அதற்கான அறிகுறிகள் கிடைக்கும். பிரேக் போடும்போது, பிரேக் பேடிலிருந்து சத்தம் ஏற்படும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2021, 02:22 PM IST
  • ஓடும் காரில் எந்த வேளையிலும் விபத்துகள் நடக்கலாம்.
  • காரின் பிரேக் பழுதடைந்தால், அதற்கு முன், பொதுவாக நமக்கு அதற்கான அறிகுறிகள் கிடைக்கும்.
  • சில நேரங்களில் பிரேக் காலிப்பர்கள் ஜாம் ஆகி விடும்.
Car Driving Tips: ஓடும் காரில் பிரேக் பழுதானால் என்ன செய்வது? முக்கிய டிப்ஸ் இதோ title=

வாகனம் ஓட்டுவது ஒரு கலையாகும். இதில் பாதுகாப்புக்கு மிக அதிக அளவில் முக்கியத்துவன் அளிக்க வேண்டும். 

ஓடும் காரில் எந்த வேளையிலும் விபத்துகள் நடக்கலாம்.  பொதுவாக கார் ஓடும்போது, காரின் பிரேக்குகள் பழுதடைந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கு இருப்பது வழக்கம். பலமுறை இப்படி நடந்தும் உள்ளது. ஆகையால், ஓட்டுநர்களை இது குறித்த பீதி எப்போதும் வாட்டுகிறது. 

இந்த அச்சத்தை போக்க இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். பிரேக் செயலிழந்தால், வாகனத்தை எவ்வாறு நிலைப்படுத்தி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது பற்றிய சில உதவிக்குறிப்புகளை இந்த பதிவில் காணலாம். 

காரின் (Cars) பிரேக் பழுதடைந்தால், அதற்கு முன், பொதுவாக நமக்கு அதற்கான அறிகுறிகள் கிடைக்கும். பிரேக் போடும்போது, பிரேக் பேடிலிருந்து சத்தம் ஏற்படும். 

சில நேரங்களில் பிரேக் காலிப்பர்கள் ஜாம் ஆகி விடும். திடீரென பிரேக் வயர் உடைந்து அல்லது மாஸ்டர் சிலிண்டர் கசிந்து, பிரேக்குகளுக்கு தேவையான அழுத்தம் கிடைக்காது. பிரேக் எரிபொருள் கசிவு பிரேக் தோல்வியையும் குறிக்கிறது.

பிரேக் செயலிழந்தால் காரை எப்படி கட்டுப்படுத்துவது

- முதலில், காரின் வேகத்தைக் குறைத்து அதைக் கட்டுப்படுத்தி, தொடர்ந்து பிரேக் பெடலை அழுத்தவும்.

- இதை பல முறை செய்வதன் மூலம், பிரேக்குகள் சரியான அழுத்தத்தைப் பெற்று மீண்டும் வேலை செய்யத் தொடங்குகின்றன.
- உங்கள் கார் டாப் கியரில் சென்று கொண்டிருந்தால், அதை குறைந்த கியரில் கொண்டு வாருங்கள். வண்டியை முதல் கியருக்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.
- பீதியில், ஐந்தாவது கியரிலிருந்து (Car Gear) நேரடியாக முதல் கியருக்கு சென்று விடக்கூடாது என்பதை இங்கே நிலைவில் கொள்ள வேண்டும். 
- இது தவிர, இந்த நேரத்தில் கியரை நியூட்ரலுக்கு கொண்டு செல்லவும் முயற்சிக்காதீர்கள். அப்படி செய்தால் கார் கட்டுப்பாட்டை இழந்துவிடும்.
- தவறுதலாகக் கூட காரை ரிவர்ஸ் கியரில் வைக்காதீர்கள். அப்படி செய்தால் உங்கள் காருக்கு பின்னால் வரும் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படலாம். 

ALSO READ: Bike Mileage Tips:உங்கள் பைக்கின் மைலேஜை மேம்படுத்த சூப்பர் டிப்ஸ் இதோ!!

- நீங்கள் இந்த சமயத்தில் கிளட்சை மட்டும் பயன்படுத்தவேண்டும், ஆக்சிலேட்டரை பயன்படுத்த வேண்டாம்.

- நீங்கள் வாகன போக்குவரத்துக்கு மத்தியில் இருந்தால், ஹார்ண், ஹெட் லைட், இண்டிகேட்டர் மற்றும் ஹெட்லேம்ப்-டிப்பர் ஆகியவை மூலம் மற்றவர்களுக்கு சிக்னல், அதாவது அறிகுறியை கொடுங்கள். இது ஆபத்தை குறைக்கும்.
- நிபுணர்களின் கூற்றுப்படி, இத்தகைய சூழ்நிலையில், வாகனத்தின் ஏர் கண்டிஷனை இயக்க வேண்டும். இது இயந்திரத்தின் அழுத்தத்தை அதிகரித்து காரின் வேகத்தை சிறிது குறைக்கும்.
- ஹெட்லைட்கள், அபாய விளக்குகள் எரியும்போது பேட்டரியின் மின்சாரம் குறைந்து காரின் வேகத்தைக் குறைக்கும் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- அருகில் மணல் அல்லது மண் குவியல் இருந்தால், ஸ்டீயரிங்கை கட்டுப்படுத்தி மணல் அல்லது மணல் திட்டு மீது காரை செலுத்தவும். இது காரின் வேகத்தை கணிசமாகக் குறைக்கும்.
- ஹேண்ட்பிரேக்கை சரியாகப் பயன்படுத்துங்கள். மானுவல் ஹேண்ட்பிரேக் கொண்ட காரில் கியர்களை மாற்றும்போது ஹேண்ட்பிரேக்கை  லேசாக பயன்படுத்தவும்.
- கார் முதல் கியரில் இருந்து, மணிக்கு 40 கிமீ வேகத்தில் இருக்கும்போது, ​​ஹேண்ட்பிரேக்கை இழுத்து வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்.
- அதிக வேகத்தில், ஹேண்ட் பிரேக்கை திடீரென பயன்படுத்த வேண்டாம். திடீரென ஹேண்ட்பிரேக் பயன்படுத்துவதால், பின்புற சக்கரங்கள் லாக் ஆகி கார் கவிழவும் வாய்ப்புள்ளது. 

ALSO READ: மாருதி கார்களின் விலை அதிகரிக்கவுள்ளது: எவ்வளவு? எப்போது? விவரம் உள்ளே

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News