Best Scheme for Senior Citizens: ஓய்வுபெற்ற பிறகு நமக்கு பொதுவாக வாழ்க்கையை நடத்த அதிக தொகை தேவைப்படுகிறது. ஆகையால், பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கு தேவையான பணத்திற்கு சரியான திட்டமிடல் மிக முக்கியமாகும். ஓய்வு பெற்ற பிறகு மூத்த குடிமக்களுக்கு அதிகபட்ச பலன்களை வழங்க, அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டங்களில் ஒன்று மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமாகும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பித் திட்டம் மூத்த குடிமக்களுக்கான மிக நேர்த்தியான திட்டமாக உள்ளது. இது 0% ரிஸ்க் கொண்ட ஒரு டெபாசிட் திட்டமாகும். இந்த திட்டத்தில் ஒரு முறை மட்டுமே தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இத்திட்டத்தின் மூலம் முதியோர்கள் வட்டி மூலம் ரூ.12 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கலாம். இந்த பதிவில் இதை பற்றி விவரமாக காணலாம்.
இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படுகிறது
அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு வைப்புத் திட்டமாகும். இதில், 5 ஆண்டுகளுக்கு நிலையான தொகை டெபாசிட் செய்யப்படுகிறது. மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30,00,000 முதலீடு செய்யலாம். இதில் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1000 ஆகும். தற்போது, SCSS மீதான வட்டி 8.2% ஆக உள்ளது.
SCSS: ரூ.12 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கலாம்
இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30,00,000 வரை டெபாசிட் செய்யலாம். இந்தத் தொகையை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் 8.2% வட்டியில் ரூ.12,30,000 கிடைக்கும். ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.61,500 வட்டியாக வரவு வைக்கப்படும். இந்த வழியில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளர் முதிர்வுத் தொகையாக மொத்தம் ரூ.42,30,000 பெறலாம்.
மேலும் படிக்க | EPFO அதிரடி: ATM-ஐ தொடர்ந்து இனி E Wallet மூலமும் பிஎஃப் பணத்தை அணுகலாம்
Senior Citizens Saving Scheme: வரிச் சலுகையும் கிடைக்கும்
வருமான வரியைச் சேமிப்பதிலும் இந்தத் திட்டம் மிகவும் சிறந்தது. இந்தத் திட்டத்தில், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைக்கும். 80C இன் கீழ், மொத்த வருமானத்தில் ரூ.1.5 லட்சத்திற்கு வரி விலக்கு கிடைக்கும்.
இதில் யாரெல்லாம் முதலீடு செய்ய முடியும்?
60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய யார் வேண்டுமானாலும் இதில் முதலீடு செய்யலாம். மேலும், விஆர்எஸ் வாங்கும் சிவில் துறை அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் வயது தளர்வு வழங்கப்படுகிறது. திட்டம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது.
இந்த திட்டத்தை நீட்டிக்கவும் முடியும்
5 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தின் பலன்களைத் தொடர விரும்பினால், டெபாசிட் தொகை முதிர்ச்சியடைந்த பிறகு, கணக்குக் காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இது முதிர்ச்சியடைந்த 1 வருடத்திற்குள் நீட்டிக்கப்படலாம். நீட்டிக்கப்பட்ட கணக்கிற்கான வட்டி முதிர்வு தேதியில் பொருந்தக்கூடிய விகிதத்தில் கிடைக்கும்.
இதில் எப்படி முதலீடு செய்வது
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) முதலீடு செய்ய, அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையங்களிலிருந்து கணக்கை திறக்கலாம். கணக்கை தனியாகவோ அல்லது மனைவியுடன் கூட்டு கணக்காகவோ தொடங்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ