பெரும்பாலான உணவுகளில் தக்காளி முதன்மையான ஒன்றாக சேர்க்கப்படுகிறது. தக்காளி உணவில் சுவைக்காக சேர்க்கப்படுகிறது. ஆனால் நன்கு பழுத்த தக்காளிகளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்திருக்க முடியாது, அவை ஒன்று இரண்டு நாட்களிலேயே அழுகி போய்விடும். ஆனால் உறைய வைக்கப்பட்ட தக்காளி அவ்வளவு எளிதில் கெட்டுப்போகாது மற்றும் அவற்றை சமையலுக்கும் பயன்படுத்தி கொள்ள முடியும். உறைய வைக்கப்பட்ட தக்காளியை பயன்படுத்தும்போது சுவையில் எந்தவித மாற்றமும் இருக்காது, அவை அதே வண்ணத்துடனும், சுவையுடனும் மட்டுமே இருக்கும். உறையவைக்கும் செயலுக்கு பிளம் அல்லது செர்ரி தக்காளிகள் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது, ஏனெனில் அவை உறுதியான தோல் மற்றும் எளிதில் உறைந்துவிடும் தன்மையை பெற்றுள்ளன.
மேலும் படிக்க | வாட்ஸ்அப்பில் வந்துள்ள சூப்பரான புதிய அப்டேட்டுகள்!
மேலும் முற்றிலும் பழுத்த மற்றும் கறைகள் இல்லாத தக்காளியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அவ்வளவாக பழுக்காத தக்காளிகளை உறைய வைத்தால் அவை உணவிற்கு பெரிதாக சுவையினை அளிக்காது. தக்காளி உறைவதற்குத் தயாராகும் வரை அதனை நன்கு பழுக்க விட வேண்டும் மற்றும் தக்காளியின் நிறத்தை வைத்தே அது பழுத்துவிட்டதா என்பதை கண்டறிய முடியும். அதே போல் தக்காளியின் மேற்புறத்தில் ஒரு விரலை அழுத்தவும். தக்காளி உங்கள் விரல் அழுத்தத்தை தாங்கவில்லை என்றால் அது உறைவதற்கு தயாராக உள்ளது என்று அர்த்தம். ஆனால் தக்காளி அழுத்தும்போது கொஞ்சம் திடமாக இருந்தால் அது பழுக்க இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்று அர்த்தம். 0 டிகிரி பாரன்ஹீட்டில் தக்காளியை உறைவிக்க வேண்டும், உறைந்த தக்காளி ஃப்ரீசரில் 6 முதல் 9 மாதங்கள் வரை உயிர்வாழும். தக்காளி வைக்கும் பையில் காற்று மற்றும் ஈரப்பதம் எதுவும் இருக்கக்கூடாது, அப்படி இருந்தால் தக்காளி நீண்ட காலத்திற்கு இருக்காது. ஃப்ரீசரில் தக்காளி நீண்ட காலம் இருக்க வேண்டும் என்று விரும்பினால், வேக்கம் சீலர் சிறந்த தேர்வு.
தக்காளியை உறைய வைக்கும் முறைகள்:
1) தக்காளியை நன்கு சுத்தம் செய்து அதன் தண்டு மற்றும் மையத்தை வெளியே எடுக்கவும், பின்னர் அதனை காற்றுப்புகாத வண்ணம் ஒரு பேக்கிங்கில் சுற்றி ஃப்ரீஸரில் வைக்க வேண்டும். அதிகப்படியான காற்றை அகற்ற, ஒரு வேக்கம் சீலர் அல்லது பையில் ஒரு வைக்கோலைச் செருகவும்.
2) கொதிக்கும் நீரில் 30 விநாடிகள் தக்காளியை வேகவிடவும், அதிலுள்ள தோல்கள் விலகிச் செல்லத் தொடங்கும் போது அவற்றை எடுக்க வேண்டும். இப்போது அதனை ஆறவைத்து ஒரு ஜாடியிலோ அல்லது பையிலோ போட்டு ஃப்ரீஸரில் வைக்க வேண்டும்.
3) தக்காளியை நன்கு வேகவைத்து எடுத்துக்கொண்டு தக்காளி குளிர்ந்தவுடன், அதிலுள்ள விதைகளை அகற்ற வேண்டும், அதன்பின்னர் அந்த சாஸை ஒரு ஜாடியில் நிரப்பி ஃப்ரீஸரில் வைக்க வேண்டும்.
மேலும் படிக்க | கட்டிப்பிடிப்பதில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ