இந்தியாவில் 11 இலக்க மொபைல் எண்ணைப் பயன்படுத்த TRAI பரிந்துரை...

TRAI வெள்ளிக்கிழமை ஒரு தீர்மானத்தை   அறிவித்துள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் , நாட்டில் 11 இலக்கங்கள்  கொண்ட  மொபைல் எண்ணைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுள்ளது... 

Last Updated : May 30, 2020, 04:26 PM IST
இந்தியாவில் 11 இலக்க மொபைல் எண்ணைப் பயன்படுத்த TRAI பரிந்துரை...  title=

TRAI வெள்ளிக்கிழமை ஒரு தீர்மானத்தை   அறிவித்துள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் , நாட்டில் 11 இலக்கங்கள்  கொண்ட  மொபைல் எண்ணைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுள்ளது... 

இனி உங்கள் மொபைல் எண் 11 இலக்கங்கள்  கொண்டதாக மாறி விடும்.  இந்திய தொலைத்தொடர்பு ஆணைய ஒழுங்குமுறைமை (TRAI) வெள்ளிக்கிழமை ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி , நாட்டில் 11 இலக்கங்கள் கொண்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்த TRAI பரிந்துரை செய்துள்ளது. TRAI இன் படி, நீங்கள் 10 இலக்க மொபைல் எண்ணை 11 இலக்க மொபைல் எண்ணுடன் மாற்றினால், நாட்டில்  இன்னும்  அதிக எண்கள் புழக்கத்திற்கு வரும்.

மொபைல் எண் வரிசை நாட்டில்  ஆயிரம் கோடி என்ற நிலைக்கு வரும்.
TRAI ன் திட்டத்தின்படி, எல்லா மொபைல் எண்ணின் முதல் இலக்கத்தையும் 9 ஆக வைத்துக் கொண்டால் தற்போது உள்ள 10 இலக்க மொபைல் எண், 11 இலக்கங்கள் கொண்ட மொபைல் எண்ணாக மாறிவிடும். எனவே, நாட்டில்  மொத்தம் 1000 கோடி  எண்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும். தற்போது உள்ள   70 சதவிகித பயன்பாட்டிற்கு 700 கோடி இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுவே போதுமானது என்றும் டிராய்  கூறியுள்ளது.

அழைக்கும் போது, ​​நீங்கள் எண்ணுக்கு முன்னால் '0' வைக்க வேண்டும்
இது தவிர, நிலையான இணைப்பிலிருந்து  அழைக்கும் போது மொபைல் எண்ணுக்கு முன்னால் '0' பயன்படுத்த  டிராய் முன்மொழிந்துள்ளது. இப்போதைக்கு, நிலையான  இணைப்புடன், தொடர்பு கொள்ள   மொபைல் அழைப்புகளுக்கு, எண்ணின் தொடக்கத்தில் '0' எண் பயன் படுத்துவது  அவசியமாக உள்ளது.   இனி ,  பூஜ்ஜியத்தை சேர்க்காமலே  மொபைல் எண்களையும் லேண்ட்லைனில் இருந்து அணுக  முடியும். . பிக்சட்  நெட்வொர்க்கிலிருந்து மொபைல்களை அழைக்க பூஜ்ஜியத்தைப் பயன்படுத்துவது கட்டாயமாக இருக்கும் பட்சத்தில்  நிலை 2, 3, 4 மற்றும் 6 இல் உள்ள அனைத்து இலவச துணை நிலைகளையும் மொபைல் எண்களாகப் பயன்படுத்த முடியும்  என்று TRAI கூறியது.

புதிய தேசிய எண் திட்டம் வரும்... இது தவிர, புதிய தேசிய எண் திட்டத்தையும்TRAI பரிந்துரைத்துள்ளது, இது விரைவில் வர உள்ளது.   லேண்ட்  லைன்  தொலைபேசிகளில்  டாங்கிள்ஸ்  இணைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மொபைல் எண்ணை 10 இலக்கங்களிலிருந்து 13 இலக்கங்களாக அதிகரிப்பது குறித்தும் டிராய்  ஆலோசித்து வருகிறது.

 - (மொழிபெயர்ப்பு) வானதி கிரிராஜ். 

Trending News