ஊழியர்களுக்கு அதிர்ச்சி: இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது... விதியில் அரசு செய்த மாற்றம்

Central Government Employees Latest News: அரசு வகுத்துள்ள விதிகளை மீறி ஊழியர்கள் ஏதாவது செய்தால், அரசு, ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க மறுக்கலாம். இது தொடர்பாக அரசு சமீபத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 14, 2024, 10:28 AM IST
  • எந்த உழியர்களுக்கு ஓய்வூதியமும் பணிக்கொடையும் கிடைக்காது?
  • அரசின் புதிய அறிவிப்பு என்ன?
  • இதை பற்றி விரிவாக இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.
ஊழியர்களுக்கு அதிர்ச்சி: இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது... விதியில் அரசு செய்த மாற்றம் title=

Central Government Employees Latest News: மத்திய அரசு தனது ஊழியர்களுக்காக அவ்வப்போது புதிய புதுப்பிப்புகளை வெளியிடுகிறது.  சில சமயங்களில் விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவற்றை பற்றிய புரிதல் இருப்பது ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமானது. சமீபத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை தொடர்பான புதிய புதுப்பிப்பை வெளியிட்டது.

புதிய அறிவிப்பில் அரசாங்கம் சில வரம்புகளை நிர்ணயித்துள்ளது. இந்த வரம்புகளை மீறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை அளிக்கப்படாது. எந்த உழியர்களுக்கு ஓய்வூதியமும் பணிக்கொடையும் கிடைக்காது? அரசின் புதிய அறிவிப்பு என்ன? இதை பற்றி விரிவாக இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

Pension and Gratuity: ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை

ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு சம்பளம் வாழ்க்கைககான ஒரு முக்கிய ஆதாரமாக இருப்பது போலவே, கிராஜுவிட்டி, அதாவது பணிக்கொடை மற்றும் ஓய்வூதியமும் ஊழியர்களுக்கு மிக முக்கியம். மத்திய அரசு (Central Government) அவ்வப்போது இவற்றுக்கான புதிய உத்தரவுகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் அரசு வகுத்துள்ள விதிகளை மீறி ஊழியர்கள் ஏதாவது செய்தால், அரசு, ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க மறுக்கலாம். இது தொடர்பாக அரசு சமீபத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Central Civil Services (Pension) Rules 2021

மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) பணிக் காலத்தில் கடுமையான குற்றம் செய்தாலோ அல்லது அலட்சியமாக இருந்தாலோ, அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிறுத்தப்படும் என மத்திய அரசு சமீபத்தில் புதிய அறிவிப்பு மூலம் அறிவித்துள்ளது. மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள் 2021 இல் சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

New Rules: ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைக்கான புதிய விதிகள்

புதிய மாற்றங்களின் கீழ், ஊழியர்களுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை பகுதி அளவிலோ அல்லது முழுமையாக அரசு நிறுத்தலாம். மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் எந்த நேரத்திலும் தங்கள் முடிவை எடுக்கலாம். பணியாளர்கள் பணியில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் தங்கள் பணிகள செய்யுமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

புகார் கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்

- ஓய்வூதியம் (Pension) மற்றும் பணிக்கொடை (Gratuity) தொடர்பான விதிகளில் மாற்றங்கள் குறித்து மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளது. 
- புதிய உத்தரவின்படி, ஒரு ஊழியரின் குற்றம் குறித்து தகவல் அல்லது புகார் வந்தால், அவரது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிறுத்தும் நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும். 
- இந்த மாற்றத்தின் மூலமாக ஊழியர்களின் சீரான செயல்பாட்டையும், அரசாங்க நிதிகளின் பாதுகாப்பையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு பொன்னான திட்டம்... அதிக வட்டி தரும் SBI FD - எவ்வளவு தொகை வரும் தெரியுமா?

இந்த தகவலை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்

அக்டோபர் 7, 2022 அன்று ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை தொடர்பான கொள்கைகளில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களைச் செய்தது. இதன் படி, ஒரு அரசாங்க ஊழியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவரது ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையின் ஒரு பகுதியை அல்லது முழுவதையும் நிறுத்தி வைக்க உரிமை உண்டு. இது தவிர, பணியாளரின் சேவைக் காலத்தில் அவர் மீது ஏதேனும் துறை சார்ந்த அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கபட்டால், அது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டால், இந்த விதிகள் அதற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Pensioners: பணி ஓய்வுக்கு பிறகும் ஓய்வூதியம், பணிக்கொடை நிறுத்தப்படலாம்சம்

- பணி ஓய்வுக்கு பிறகு, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையைப் பெற்ற பின்னர், ஏதேனும் தவறு செய்ததாகக் கண்டறியப்பட்டால், அவரது ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையின் முழு அல்லது பகுதி அளவு தொகையை திரும்பப் பெறலாம் என்று மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 
- இந்த நேரத்தில், ஊழியர் செய்த வேலையால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பதும் ஆராயப்படும். 
- இது தவிர, பணியாளரின் ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை நிரந்தரமாக அல்லது சிறிது காலத்திற்கு நிறுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட துறைக்கு உரிமை உள்ளது.
- அரசின் கருவூலத்தை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC இடம் அனுமதி பெறுவது அவசியம்

அரசு மற்றொரு அறிவுறுத்தலையும் வெளியிட்டுள்ளது. அதன் கீழ் எந்த ஒரு ஊழியரின் ஓய்வூதியம் தொடர்பான முடிவை இறுதி செய்வதற்கு முன் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனை (யுபிஎஸ்சி) கலந்தாலோசிப்பது அவசியமாகும். இந்தப் புதிய விதியின்படி, ஒரு ஊழியரின் ஓய்வூதியம் அல்லது கிராஜுவிட்டி நிறுத்தப்பட்டாலோ அல்லது அது குறைக்கப்பட்டாலோ, அந்த ஊழியருக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதி 44ன் படி மாதம் ஒன்றுக்கு ரூ.9000 குறைந்தபட்ச நிலையான தொகை வழங்கப்படும். ஓய்வூதியதாரர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | டிசம்பர் 15: அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்துவதற்கான காலக்கெடு... யார் அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News