கவனம்! ஒவ்வொரு 12 இலக்க தனித்துவ எண்ணும் அசல் ஆதார் அட்டை அல்ல!

ஒருவர் 12 இலக்க எண் கொண்ட ஆதார் ஆட்டையை உங்களிடம் கொடுத்தால், முதலில் அது சரிபார்க்க வேண்டும். ஏனென்றால், பல போலி ஆதார் அட்டை பயன்படுத்துவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2021, 09:08 PM IST
  • ஆதார் அட்டை மிக முக்கியமான அரசு ஆவணம்.
  • இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு மிகவும் முக்கியமானது.
  • போலி ஆதார் அட்டை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கவனம்! ஒவ்வொரு 12 இலக்க தனித்துவ எண்ணும் அசல் ஆதார் அட்டை அல்ல! title=

ஆதார் அட்டை மிக முக்கியமான அரசு ஆவணம். ஒரு ஆதார் அட்டையில் அந்த நபரின் பல முக்கிய தகவல்கள் உள்ளன. அரசாங்கத் திட்டங்களாக இருந்தாலும் அல்லது குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றாலும் சரி, பல பணிகள் முழுமையடையாமல் இருப்பதற்கு ஆதார் கார்டு இல்லாமல் இருப்பதே காரணம். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு (Aadhar card) மிகவும் முக்கியமானது.

ஆதார் மூலம் தெரியாத எந்த நபரையும் எளிதாக அடையாளம் காண முடியும். அதாவது ஆதார் அட்டையை பரிசோதித்து (Aadhaar verification) பார்ப்பதன் மூலம் இது சாத்தியமாகும். வீட்டு வேலைக்காரர், ஓட்டுநர், வாடகைக்கு வீடு கொடுக்க, பணியில் சேர்த்துக்கொள்ளவதற்கு முன் நீங்கள் அவர்களின் ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டும்.

நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆதார் சரிபார்ப்பை எளிதாக செய்யலாம். இதற்காக நீங்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. பலர் போலி ஆதார் (Fake Aadhaar card) எண்களைப் பயன்படுத்தி மோசடி செய்வதால், ஆதார் எண் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நீங்கள் அடையாளம் காணலாம்.

ஆதார் அட்டையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India) கூற்றுப்படி, ஒவ்வொரு 12 இலக்க தனித்துவ எண்ணும் ஆதார் அட்டை எண்ணாக கருத முடியாது. அட்டை வைத்திருப்பவரின் அடையாளச் சான்றாக ஏற்கும் முன் ஆதார் அட்டை சரிபார்க்கப்பட வேண்டும். இது மோசடியைத் தவிர்க்க உதவும் என எச்சரித்துள்ளது. 

ALSO READ | Aadhaar - DL link: வீட்டில் இருந்த படியே, ஆதார் - ஓட்டுநர் உரிமத்தை இணைக்கலாம்

அதாவது ஒருவர் 12 இலக்க எண் கொண்ட ஆதார் ஆட்டையை உங்களிடம் கொடுத்தால், அதை நகல் எடுத்து வைத்துக்கொள்வதற்கு முன்பு, முதலில் அது சரிபார்க்க வேண்டும். ஏனென்றால், பல போலி ஆதார் அட்டை பயன்படுத்துவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆதார் அட்டை ஒரிஜினலா? போலியானதா? என எப்படி சரிபார்ப்பது?

- ஆதார் சரிபார்ப்புக்கு, பயனர்கள் முதலில் www.uidai.gov.in க்குச் செல்ல வேண்டும்

- இதற்குப் பிறகு, நீங்கள் 'எனது ஆதார்' (My Aadhaar) கிளிக் செய்து 'ஆதார் சேவைகள்' (Aadhaar Services) பிரிவுக்குச் செல்ல வேண்டும்.

- இங்கே நீங்கள் 'ஆதார் எண்ணைச் சரிபார்க்கவும்' (Verify Aadhaar Number) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும்.

- ஆதார் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டை இங்கே உள்ளிட்டு 'சரிபார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்

- இதற்குப் பிறகு ஆதார் அட்டை வைத்திருப்பவரின் தகவல்கள் திரையில் காட்டத் தொடங்கும்.

ALSO READ | Aadhaar அட்டையில் உள்ள போட்டோ பிடிக்கவில்லையா; நொடியில் மாற்றலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News