அரசு சிவில் பணிகளில் சேர்வதற்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற 24 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை UPSC நடத்தும். தற்போது 896 காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.
இதில் ப்ரிலிம்ஸ் எனப்படும் முதல் நிலை தேர்வுக்காக பிப்ரவரி 19ம் தேதிமுதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் முடிகிறது.
இந்த ஆண்டு முதல் நிலை தேர்வு ஜூன் 2ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விண்ணப்பிப்பவர் 21 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக இத்தேர்வில் பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு அமலாகிறது.