புவனேஸ்வர் குமார் மற்றும் ஜாகிர்கான் திருமணத்தை அடுத்து, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். இவர்களை குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அனுஷ்கா சர்மா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, விராத் கோலியுடன் உள்ள உறவு குறித்தோ மீடியாக்களிடம் பேச மறுத்து வந்தார். ஆனால் சமீபகாலமாக இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டனர்.
தற்போது, விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் டிசம்பர் 12-ம் தேதி இத்தாலியில் உள்ள மிலன்நகரில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றும், டிசம்பர் 9-ம் தேதி முதல் திருமணம் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.
டிசம்பர் 21-ம் தேதி மும்பையில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் இல்லை.