சிவகார்த்திகேயனின் சீமராஜா! மாஸ் வரவேற்பு பெற்றது டீசர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!

Vijaya Lakshmi விஜயலட்சுமி | Updated: Aug 4, 2018, 09:57 AM IST
சிவகார்த்திகேயனின் சீமராஜா! மாஸ் வரவேற்பு பெற்றது டீசர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் சீமராஜா. "

இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கின்றார். சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் கௌரவ வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யத்துள்ளார். 24AM நிறுவனம் சார்பில் ராஜா இப்படத்தினை தயாரிக்கிறார். கடந்த ஜூலை 25ம் தேதி சீமராஜா திரைப்படத்தின் வாரேன் வாரேன் சீமராஜா பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் தற்போது சீமராஜா திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் நேற்று மதுரையில் பிரமாண்டமான விழாவில் வெளியிடப்பட்டது. வெளியாகி ஒரு மணி நேரத்திலேயே 1 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது. 2 மணி நேரத்தில் 4 லட்சம் பார்வைகளை தாண்டி சென்றது.

செப்டம்பர் மாதம் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சீமராஜா திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.