விநாயக சதுர்த்தி அன்று சந்திரனை ஏன் பார்க்க கூடாது?

விநாயக சதுர்த்தி நாளில், சந்திரனைப் பார்த்தால் சந்திர தோஷத்தை உண்டாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதன் பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 8, 2024, 07:03 AM IST
  • விநாயகர் சதுர்த்தி வழிபாடு முறைகள்
  • சந்திரனை அந்நாளில் பார்ககக்கூடாது
  • ஈஸியான பரிகாரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்
விநாயக சதுர்த்தி அன்று சந்திரனை ஏன் பார்க்க கூடாது? title=

பாத்ரபத சுக்லா மாதத்தின் சதுர்த்தி தேதியில் விநாயக சதுர்த்தி விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ஆம் தேதி முதல் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. 3,5,7 அல்லது 10 நாட்கள் வரை விநாயகப் பெருமானை அவரவர் திறனுக்கு ஏற்றவாறு வைத்து வழிபாடு நடத்தி, அதன் பின் நீரில் கரைப்பார்கள். இந்நிலையில் விநாயக சதுர்த்தி அன்று நடைபெறும் ஒரு சுவாரஸ்யமான தகவலை தெரிந்து கொள்வோம். அதாவது விநாயகர் சதுர்த்தி நாளில் சந்திரன் காணப்படுவதில்லை என்று நம்பப்படுகிறது. ஒருவேளை இந்த நாளில் சந்திரனைப் பார்ப்பவருக்கு தோஷம் உண்டாகுமாம். 

சந்திரனை பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?

ஒருவேளை நீங்கள் சந்திரனை பார்த்துவிட்டால் அவரை மனமுருகி வழிபாடு நடத்துங்கள். குடும்பத்துக்கு கஷ்டம் தரக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. விநாயக சதுர்த்தியின் போது சந்திரனைக் கண்டால் விநாயகப் பெருமானுக்கு விரதம் இருக்க வேண்டும் என்பதும் நம்பிக்கை.

மேலும் படிக்க | எத்தனைவித சனி பாதிப்புகள்? கண்டச்சனி முதல் ஏழரை வரை ஏழரையை கூட்டும் சனீஸ்வரரின் பார்வை பலன்கள்!

இந்த நாளில் சந்திரனைப் பார்த்தால், விநாயகப் பெருமானை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். மேலும், விநாயக சதுர்த்தி நாளில் இறைவனை வழிபடுவது அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், விநாயக சதுர்த்தி அன்று தற்செயலாக சந்திரனைக் கண்டால், 27 புதன்கிழமை அன்று விநாயகர் கோவிலுக்குச் சென்று வணங்க வேண்டும். சந்திரனை பார்த்ததும் அன்றைய தினம் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். விநாயகப் பெருமானுக்கு 21 துர்வாக் கட்டிகளை சமர்பிக்கவும். இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் சந்திரனை பார்க்கும் தோஷம் நீங்கும்.

விநாயகர் சதுர்த்தி நாளில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வரச் செய்து அதற்கு சந்தனம், குங்குமமிட்டு தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு இடுப்பில் துண்டு கட்டி பூமாலை, அறுகம்புல் மாலை, எருக்கம் மாலை அணிவித்து குன்றிமணியால் விநாயகரின் கண்களை திறக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வினைகள் அகலும், தடைகள் உடையும், வெற்றிகள் குவியும், மகிழ்ச்சி பொங்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | கோலாகலமாக கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியே உங்களை கோடீஸ்வரராக்கும்! எப்படி? இப்படித்தான்... 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News