திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை கல்கி கோச்லி; குடும்பத்தாரின் ரியாக்சன்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதை அவரது குடும்பத்தினர் அறிந்தபோது, ​​குடும்பத்தின் எதிர்வினை என்ன என்பதை கல்கி வெளிப்படுத்தியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 18, 2020, 02:49 AM IST
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை கல்கி கோச்லி; குடும்பத்தாரின் ரியாக்சன்

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் இந்த நாட்களில் தனது புதிய உறவு மற்றும் அவரது கர்ப்பம் குறித்து விவாதித்து வருகிறார். தற்போது அவரின் கர்ப்ப படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவி கல்கி, தனது காதலன் கை ஹெர்ஷ்பெர்க்குடன் உறவு வைத்துக் கொண்டதில் கர்ப்பமானார். விரைவில் அவர் குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். அதாவது தாயாகவுள்ளார். 

இதற்கிடையில், ஒரு வானொலி நிகழ்ச்சியில், அவர் கர்ப்பமாக இருப்பதை அவரது குடும்பத்தினர் அறிந்தபோது, ​​குடும்பத்தின் எதிர்வினை என்ன என்பதை கல்கி வெளிப்படுத்தியுள்ளார்.

கல்கி இதை வெளிப்படுத்திய வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பாலிவுட்டின் பிரபல நடிகை கரீனா கபூர் கான். இந்த வானொலி நிகழ்ச்சியின் போது, ​​கரீனா கல்கியிடம் நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உங்கள் குடும்பத்தினர் அறிந்ததும், என்னவிதமான எதிர்வினை இருந்தது? எனக் கேட்டார். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Need to put my feet up. Quite literally. #swellings #pregnancy #longdays

A post shared by Kalki (@kalkikanmani) on

அதற்கு பதில் அளித்த அவர், எனது அம்மா சொன்னார், அடுத்த முறை நீங்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, வாழ்க்கை முழுவதும் கடைசி வரை ஒன்றாக இருப்போம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று என் அம்மா சொன்னதாக கல்கி கூறினார். எனது திருமண வாழ்வில் ஏற்கனவே ஒரு முறை விவாகரத்து நடந்துள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு அவர் அப்படி சொன்னார் என்றார். 

அனுராக் காஷ்யப் மற்றும் கல்கி ஆகியோர் ஏப்ரல் 30, 2011 அன்று திருமணம் செய்து கொண்டனர். அனுராக்கின் முதல் வெற்றிகரமான படமான "தேவ் டி" 2009 இல் வெளியான, அந்த படத்தின் மூலம் கல்கியின் வாழ்க்கை தொடங்கியது. பின்னர் அவர் அனுராக் தயாரித்த "ஷைத்தான்" படத்தில் தோன்றினார்.

 

இந்த நாட்களில் கல்கி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அதனால்தான் அவர் தனது கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

More Stories

Trending News