மருமகனின் அண்ணனை திருமணம் செய்ய கணவரை விவாகரத்து செய்த மாமியார்!

பஞ்சாப்பில் மருமகனின் அண்ணனை மாமியார் மணம் முடிக்க தனது கணவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் வைரளாகி வருகிறது!!

Updated: Oct 19, 2019, 05:33 PM IST
மருமகனின் அண்ணனை திருமணம் செய்ய கணவரை விவாகரத்து செய்த மாமியார்!

பஞ்சாப்பில் மருமகனின் அண்ணனை மாமியார் மணம் முடிக்க தனது கணவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் வைரளாகி வருகிறது!!

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரை சேர்ந்த 37 வயது பெண்ணிற்கு 18 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் 21 வயது இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு இரு வீட்டாருக்கும் இவர்களது காதல் விவகாரம் தெரிய வந்ததை அடுத்து இவர்களின் காதலுக்கு அவர்களது பெற்றோர் பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில் இவர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில், அந்த பெனின் மகள் கணவருடன் வாழச் சென்றுவிட்டார். வீட்டில் அந்த பெண்ணும், அவரது கணவரும் மட்டுமே இருந்தனர். இந்நிலையில் திருமணமான சந்தியா மகளின் கணவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். 22 வயதாகும் அவர் பதான்கோட் பகுதியில் பணியாற்றி வருகிறார். அந்த பகுதியிலிருந்து சந்தியாவின் வீடு அருகிலிருந்ததால் அவர் அடிக்கடி சந்தியாவில் வீட்டிற்கு சொந்தக்காரர் என்ற காரணத்தை வைத்துப் போய் வந்து இருக்கிறார்.

இதற்கிடையில் சந்தியாவிற்கும், சந்தியாவின் மகனின் கணவரின் அண்ணனிற்குக் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் முறையற்றது என்றாலும் அவர்கள் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் சந்தியா தனது கணவரை அவருக்குத் தெரியாமலேயே விவாகரத்து செய்யும் வேலையைச் செய்து வந்தார். இந்த தகவல் எதுவும் சந்தியாவிற்குத் தெரியாது. அவர் அவரது கணவருடனேயே வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் சந்தியா தன் கணவரிடம் இருந்து கோர்ட்டில் இருந்து முறையாக விவாகரத்து பெற்றார். அதுவும் அவரது கணவருக்குத் தெரியாமலேயே இந்த விவகாரத்தைப் பெற்றார். இந்நிலையில் சந்தியாவும், அவரது மகளின் கணவரின் அண்ணனும் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

அவர்கள் வீட்டை விட்டு ஓடிய பின்பு தான் நடந்த சம்பவங்கள் எல்லாம் மற்ற வீட்டாருக்குப் புரிந்தது. இதையடுத்து சந்தியா தனது புது காதலனை திருமணம் செய்து கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்த போது மகள் தன் அம்மா புதுப்பெண் போல கல்யாண கோலத்தில் வந்ததையும், அருகில் கணவரின் அண்ணன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை ஏற்க குடும்பத்தினர் மறுத்துவிட்டதால தன்து குடும்பத்தினர் மூலம் தனக்கு ஆபத்து இருப்பதாகவும், தகுந்த பாதுகாப்பு தரும்படியும் வழக்கு தொடர்ந்துள்ளார் சந்தியா. இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.