BSNL Plan Prepaid: ஒவ்வொரு நாளும் 2GB தரவு மற்றும் பல சலுகை.. புதிய 199 திட்டம்

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்காக ரூ. 199 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2020, 09:45 PM IST
  • ப்ரீபெய்ட் பயனர்களுக்காக ரூ. 199 என்ற புதிய திட்டத்தை அறிமுகம்.
  • ஒரு நாளைக்கு 250 நிமிட அழைப்பு மட்டும் கிடைக்கும்.
  • பயனர்களுக்கு மொத்தம் 60 ஜிபி தரவு வழங்கப்படுகிறது.
  • 2021 ஜனவரி 1 முதல் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இந்த திட்டம் கிடைக்காது.
  • இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் 2020 டிசம்பர் 24 முதல் பயன்பாட்டுக்கு வரும்.
BSNL Plan Prepaid: ஒவ்வொரு நாளும் 2GB தரவு மற்றும் பல சலுகை.. புதிய 199 திட்டம் title=

BSNL Prepaid 199 Plan Details: அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்காக ரூ. 199 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டத்துடன் ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்களுக்கு 2GB தரவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும்.

இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் (BSNL Plan) வரம்பற்ற குரல் (Unlimited Voice Calling) அழைப்புக்கான நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு நாளைக்கு 250 நிமிட அழைப்பு மட்டும் கிடைக்கும். இதனுடன், தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) கிடைக்கும். 30 நாட்கள் செல்லுபடியாகும் என்பதால், இந்த திட்டத்தில் பயனர்களுக்கு மொத்தம் 60 ஜிபி தரவு வழங்கப்படுகிறது.

BSNL PV 186 திட்டம் அடுத்த வருடம் முதல் கிடைக்காது:

பி.எஸ்.என்.எல் இன் புதிய 199 ரூபாய் திட்டம் (BSNL New Rs 199 Plan) , தற்போதைய பி.வி 186 (PV 186) ப்ரீபெய்ட் திட்டத்தின் மாற்றாகும். இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் செல்லுபடி காலத்தை பெறுகிறார்கள் என்பதை நினைவில் கொள்க. தற்போது, ​​இந்த திட்டம் கிடைக்கிறது. ஆனால் 2021 ஜனவரி 1 முதல் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இந்த திட்டம் கிடைக்காது.

ALSO READ |  வெறும் ₹.948-க்கு குடும்பத்தில் உள்ள அனைவருக்கு ‘Unlimited’ Data, Voice Call

சமீபத்திய பிஎஸ்என்எல் 199 திட்டம் நிறுவனத்தின் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களில் (Telecom Circles) கிடைக்கும் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். டெலிகாம் டாக் அறிக்கையின்படி, இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் 2020 டிசம்பர் 24 முதல் பயன்பாட்டுக்கு வரும்.

பிஎஸ்என்எல் 199 திட்டம் vs ரிலையன்ஸ் ஜியோ 199 திட்டம் (BSNL vs Reliance Jio)

BSNL 199 திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ திட்டத்துடன் ஒப்பிடும் போது, ஜியோ ரூ 199 திட்டத்தில் பயனர்களுக்கு ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி தரவு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஜியோ திட்டம் 28 நாட்கள் மட்டும் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், ஜியோ டு ஜியோ (Jio to Jio) அன்லிமிடெட் அழைப்பு மற்றும் பிற நெட்வொர்க்குகளில் அழைப்பதற்கு 1000 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன.

ALSO READ |  Airtel Vs Jio Vs Vi - 365 நாட்கள் செல்லுபடியாகும் அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டங்கள்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News