இதை செய்தால், Phone Unlock-காக இருந்தாலும் உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் எதையும் பார்க்க முடியாது!!

உங்கள் ஃபோன் யார் கையில் கிடைத்தாலும் அவர்கள் அதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் கேட்கும்போது ஃபோனைக் கொடுக்காமலும் இருக்கமுடியாது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2020, 04:29 PM IST
  • பலருக்கு மற்றவர்களின் தொலைபேசிகளைப் பார்க்கும் பழக்கம் உள்ளது.
  • நீங்கள் விரும்பினால், உங்கள் ஃபோனில் யாரும் எந்த App-யும் பார்க்காதவாறு செய்ய முடியும்.
  • இந்த அம்சம் Android 5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட எல்லா பதிப்புகளிலும் கிடைக்கிறது.
இதை செய்தால், Phone Unlock-காக இருந்தாலும் உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் எதையும் பார்க்க முடியாது!! title=

புது தில்லி: பெரும்பாலும் பலருக்கு மற்றவர்களின் தொலைபேசிகளைப் பார்க்கும் பழக்கம் உள்ளது. உங்கள் தொலைபேசி அன்லாக்காக (Unlock) இருந்தால், உங்கள் ஃபோன் யார் கையில் கிடைத்தாலும் அவர்கள் அதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் கேட்கும்போது ஃபோனைக் கொடுக்காமலும் இருக்கமுடியாது. இப்படிப்பட்ட சூழலில் உங்கள் ஃபோன் அன்லாக்காக இருந்தாலும், நீங்கள் விரும்பினால், உங்கள் ஃபோனில் யாரும் எந்த App-யும் பார்க்காதவாறு செய்ய முடியும்.

இதற்காக உங்கள் Android தொலைபேசியில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. அதைப் பயன்படுத்த நீங்கள் சில எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.

Android ஃபோனில், Pin the Screen அல்லது Screen Pinning என்ற அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், உங்கள் விருப்பமின்றி, அன்லாக் ஆகியிருக்கும் உங்கள் ஃபோனை யாரும் பயன்படுத்த முடியாது. இந்த அம்சம் Android 5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட எல்லா பதிப்புகளிலும் கிடைக்கிறது.

Pin the Screen அல்லது Screen Pinning-ன் முக்கிய செயல்பாடு என்னவென்றால், இதில் நீங்கள் எந்த ஒரு செயலியையும் Lock அல்லது Pin செய்யலாம். அதன்பிறகு நீங்கள் விரும்பும் வரை யாராலும் உங்கள் ஃபோனில், அந்த செயலியைத் தவிர வேறு எந்த செயலியையும் பார்க்க முடியாது. ஒரு செயலியை பார்க்க நீங்கள் ஒருவரிடம் உங்கள் ஃபோனைக் கொடுத்தால், கண்டிப்பாக இந்த அம்சத்தை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் privacy-யும் பாதிக்கப்படாது, உங்கள் ஃபோனின் பிற செயலிகளையும் யாரும் திறக்க முடியாது.

ALSO READ: What a App! WhatsApp.. ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் பயன்படுத்தலாம்!

இந்த சிறப்பம்சம் வாய்ந்த App எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்கலாம்:

  • இந்த அம்சம் எல்லா Android தொலைபேசிகளிலும் உள்ளது. ஃபோனில் இது Pin the Screen அல்லது Screen Pinning என்ற பெயரில் இருக்கும். இதைப் பயன்படுத்த, நீங்கள் முதலில் ஃபோனின் Settings-ஐ ஓப்பன் செய்ய வேண்டும்.
  • ஃபோனின் Setting-ல், Security & Lock Screen என்ற ஆப்ஷன் காணப்படும்.
  • Security & Lock Screen -ல் கிளிக் செய்த பிறகு, இங்கு Privacy தொடர்பான பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில், அனைத்திற்கும் கீழே Screen Pinning ஆப்ஷன் இருக்கும்.
  • Screen Pinning ஆப்ஷனில் Tap செய்து அதை ஆன் செய்யுங்கள்.
  • இனி உங்கள் ஃபோனில் நீங்கள் எந்த App-ஐ Pin செய்ய விரும்புகிறீர்களோ, அதை ஓபன் செய்து மீண்டும் மூடி விடுங்கள்.
  •  அதன் பிறகு Recent Apps ஆப்ஷனில் சென்று, அங்கு நீங்கள் Pin செய்ய விரும்பும் App-ஐ நீண்ட நேரம் அழுத்துங்கள். அதன் பிறகு Pin ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு உங்கள் ஃபோனில் Pin செய்யப்பட்ட App-ஐ தவிர வேறு எந்த App-ம் ஓப்பன் ஆகாது.

பின்னர் Pin ஆப்ஷனை நீக்க, நீங்கள் Home மற்றும் Back பட்டனை ஒன்றாக அழுத்தி Lockscreen password-ஐ பயன்படுத்த வேண்டும்.

ALSO READ: வீடியோ அழைப்பு வசதியுடன் WhatsAppப்புடன் மோதும் Telegram

Trending News