மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க தடை -சென்னை உயர்நீதிமன்றம்!

மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வேறு இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரினால் காவல்துறை பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Last Updated : Apr 28, 2018, 08:34 PM IST
மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க தடை -சென்னை உயர்நீதிமன்றம்! title=

20:27 28-04-2018

மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

மேலும் வேறு இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரினால் காவல்துறை பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. அய்யாகண்ணு அவர்கள் தொடுத்த இந்த வழக்கில் முன்னதாக இன்று அனுமதி வழங்கியதை அடுத்து அந்த அனுமதியினை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 

இந்த மேல்முறையீட்டு மனுவரை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம இந்த அனுமதிக்கு தடை விதித்துள்ளது. மேலும் அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவிற்கு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது.


16:58 28-04-2018

காவிரி விவகாரத்தில் சென்னை மெரினாவில் அய்யாக்கண்ணு ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்த உயர்நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு! 


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவுக்கு பதிலளித்த சென்னை மாநகர காவல்துறை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என தெரிவித்தது. அதிகளவில் பொதுமக்கள் கூடும் போது பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “காவிரி விவகாரத்தில் உரிமை கோருவதை விட மெரினா கடற்கரையை பராமரிப்பதுதான் முக்கியமா?” என நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், “போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு உரிமை உண்டு. கட்டுப்படுத்த இல்லை” எனவும் கூறினர். 

“பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூடும் போது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை எனவே பண்டிகையை தடை செய்ய வேண்டும் என கோர முடியுமா?” என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். அய்யாக்கண்ணும் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மெரினாவில் நடந்த போராட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய புதன்கிழமை அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டது. 

தற்போது, காவிரி விவகாரத்தில் சென்னை மெரினாவில் அய்யாக்கண்ணு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழக அரசு அனுமதியளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..! 

Trending News