அமீர்கானின் அடுத்த படம் ரெடி-தயாரிப்பாளர் யார் தெரியுமா?

பாலிவுட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைத் தன் பின்னால் வைத்திருக்கும் ஒரு நடிகர், 'மிஸ்டர்.பெர்ஃபெக்ட்' என்று கூறப்படும் அமீர்கான். 

Updated: Mar 21, 2018, 06:30 PM IST
அமீர்கானின் அடுத்த படம் ரெடி-தயாரிப்பாளர் யார் தெரியுமா?

பாலிவுட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைத் தன் பின்னால் வைத்திருக்கும் ஒரு நடிகர், 'மிஸ்டர்.பெர்ஃபெக்ட்' என்று கூறப்படும் அமீர்கான். கடந்த 27 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் அமீர் கான் நடப்பில் உருவான 'டங்கல்' திரைப்படம். பல்வேறு மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது. 

இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் வெளியான டங்கல், யாரும் எதிர்பாராத வகையில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது. 

இதையடுத்து, டங்கல் திரைப்படம் ஹாங்காங்கில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. ஹாங்காங்கிலும் டங்கல் படம் வெளியான ஒரு வாரத்துக்குள்ளேயே 6 மில்லியன் ஹாங்காங் டாலர்களை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் இருக்கும். பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை எல்லாம் டங்கல் முறியடித்துள்ளது. 

இதை தொடர்ந்து, அமீர்கான் அடுத்ததாக, 'தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' (Thugs of Hindustan) என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் இவருடன் நடிகர் அமிதாப் பச்சனும் நடிக்க இருப்பதாகவும் இந்த தீபாவளிக்கு இந்தப்படம் வருவதாகவும் கூறப்படுகிறது. 

இப்படத்தை முகேஷ் அம்பானி தயாரிக்க இருக்கிறார். மேலும், இவை மஹாபாரதத்தை அடிப்படையாக கொண்டு எடுக்க உள்ளதால், இதற்கு ரூ 1000 கோடி பட்ஜெட் ஒதுக்கிவுள்ளார்களாம்.