அறிமுகமாகிறது ஃபேஸ்புக்கின் ‘டேட்டிங் சேவை’

முதன் முறையாக ஃபேஸ்புக்கில் டேட்டிங் சேவை அறிமுகமாவதாக ஃபேஸ்புக் நிர்வாகி மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்! 

Last Updated : May 2, 2018, 01:17 PM IST
அறிமுகமாகிறது ஃபேஸ்புக்கின் ‘டேட்டிங் சேவை’ title=

கடந்த மார்ச் 19-ம் தேதி அன்று  ஒரு தனியார் தொலைக்காட்சியில் "கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஃபேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாக செய்தி வெளியிட்டது. இந்த செய்தியால் உலக முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் சமூக வலைத்தளங்கள் மீது மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களை சமூக வலைத்தள பயன்பாட்டை நிறுத்தி விடலாமா என்ற வாக்கில் நினைக்க தூண்டியிருக்கிறது.

இந்த தகவல் திருட்டு சர்ச்சையில் சிக்கி கொண்ட பேஸ்புக், பங்குகளின் வீழ்ச்சி காரணமாக பல ஆயிரம் கோடி டாலர்களை இழந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தகவல் திருட்டு நடந்ததை ஒப்புக் கொண்ட பேஸ்புக் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டதோடு, இனி மேல் இது போன்ற நிகழ்வு இருக்காது என்றும் உறுதியளித்தது.

இதையடுத்து, கலிஃபோர்னியாவில் நேற்று நடைபெற்ற ஃபேஸ்புக் நிறுவனத்தின் டெவலப்பர்கள் கூட்டத்தில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிறிய காலம் சேர்ந்து இருப்பது போன்றல்லாமல் நீண்டகாலம் நிலைக்கக் கூடிய உறவுகளை தேர்ந்தெடுப்பதற்கான சேவையை அது வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து அவர் தனிநபர் விவரங்களை பாதுகாப்பது முக்கியமாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending News