புருவப்புயல் பிரியா வாரியர் மீது ஒரு அடார் லவ் பட இயக்குநர் புகார்!

புருவப்புயல் பிரியா வாரியர் மீது ஒரு அடார் லட் திரைப்படத்தின் இயக்குநர் ஒமர் லூலு புகார் அளித்துள்ளார்!

Last Updated : Mar 14, 2019, 11:30 AM IST
புருவப்புயல் பிரியா வாரியர் மீது ஒரு அடார் லவ் பட இயக்குநர் புகார்!

புருவப்புயல் பிரியா வாரியர் மீது ஒரு அடார் லட் திரைப்படத்தின் இயக்குநர் ஒமர் லூலு புகார் அளித்துள்ளார்!

மலையாள மொழியில் உருவாகி சமீபத்தில் வெளியான ஒரு அடார் லவ் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் கண்ணடித்து பிரபலமானவர்  பிரியா வாரியர். இந்த பாடல் காட்சியால் பெரும் புகழ் பெற்ற பிரியா வாரியர், தனது படத்தின் ப்ரோமஷன் வேலைகளில் பங்கேற்மல் அலைக்கழித்தார் என படத்தின் இயக்குநர் ஒமர் லூலு அவர் மீது புகார் அளித்துள்ளார்.

கடந்த மாதம் வெளியான ஒரு அடார் லவ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பிரியா வாரியர் மீது அந்த படத்தின் டைரக்டர் ஓமர் லூலு புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத்திரைப்படத்திற்கு முதலில் நூரின் ஷெரீப் தான் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார் எனவும், பிரியா வாரியர் கண்ணடித்து நடித்தது பிரபலம் ஆனதால் நூரினை துணை கதாபாத்திரமாக்கி பிரியாவை முதன்மை கதாநாயகியாக மாற்றினார்கள் எனவும் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், ‘இந்த படத்தின் ஒரிஜினல் பதிப்பில் பிரியாவாரியர் கதாநாயகி கிடையாது. அவர் கண்ணடித்தது பிரபலம் ஆனதால், தயாரிப்பாளர் என்னை அணுகி பிரியா வாரியரை கதாநாயகியாக வருவது போல் கதையை மாற்றி எழுதும்படி கூறினார்.

நூரின் ஷெரிப் தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பிறகு அவரது கதாபாத்திரம் துணை கதாபாத்திரமாக்கப்பட்டது. படத்தினால் புகழ் கிடைத்த பின்னர் பிரியாவாரியர் பட புரமோ‌ஷன் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.

பட வெளியீட்டுக்கு பிறகு நடந்த படத்தை பிரபலபடுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.

More Stories

Trending News