25 வருட திரைப்பயணத்தை கொண்டாடிய அருண் விஜய்

25 வருட திரைப்பயணத்தை தனது ரசிகர்களுடன் நடிகர் அருண் விஜய் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

Last Updated : Feb 18, 2020, 02:06 PM IST
25 வருட திரைப்பயணத்தை கொண்டாடிய அருண் விஜய்

25 வருட திரைப்பயணத்தை தனது ரசிகர்களுடன் நடிகர் அருண் விஜய் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்து வரும் படம் மாஃபியா. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் அருண் விஜய்யின் 25 வருட சினிமா பயணத்தை பாராட்டும் வகையில் அவரது ரசிகர்கள் மேடையில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

1995ல் சுந்தர்.சி இயக்கிய முறை மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் அருண் விஜய். அந்த வகையில் 2020ல் தற்போது அவர் நடித்துள்ள மாஃபியா படம், அவரது 25ஆவது ஆண்டின்  27ஆவது படமாக அமைந்துள்ளது.

More Stories

Trending News