விரைவில் வெளியாகிறது Maari-2; படக்குழுவினர் அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படத்தின் FirstLook போஸ்டர் வரும் நவம்பர் 2-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

Last Updated : Oct 30, 2018, 02:10 PM IST
விரைவில் வெளியாகிறது Maari-2; படக்குழுவினர் அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படத்தின் FirstLook போஸ்டர் வரும் நவம்பர் 2-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமாக மாரி-2 படம் உருவாகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிக்கும் இப்படத்திற்கு தனுஷ்-க்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும், வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் 26 ஆம் தேதி படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமிருப்பதாக அறிவித்த படக்குழுவினர் கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கள் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்தனர்.

இதனையடுத்து படத்தின் போஸ்ட புரடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வந்தது. விரைவில் இப்படம் வெளியீட்டுக்கு தயாராகிவிடும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் நாயகன் தனுஷ் வரும் நவம்பவர் 2-ஆம் நாள் இப்படத்தின் FirstLook போஸ்டர் வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் இப்படம் விரைவில் திரையினை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது!

More Stories

Trending News