சூப்பர்ஸ்டார் படத்தில் இணையும் ஃபஹத் பாசில்.. அதுவும் இந்த படத்தில்

Actor Fahadh Faasil In Rajinikanth Movie : மலையாள நடிகர் ஃபஹத் பாசில், நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 6, 2024, 10:50 AM IST
  • படங்களில் கலக்கி வரும் மலையாள நடிகர் ஃபஹத் பாசில்.
  • அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்துடன் இணைகிறார்.
  • கூலி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்.
சூப்பர்ஸ்டார் படத்தில் இணையும் ஃபஹத் பாசில்.. அதுவும் இந்த படத்தில் title=

Actor Fahadh Faasil In Rajinikanth Movie : தற்போது டாப் நடிகராக கலக்கி வரும் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிசியாக இருக்கும் ரஜினிகாந்த்:
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த், 73 வயதாகும் வயதிலும் பல படங்களில் நடித்து வருவதுடன், அந்த படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்தும் வருகின்றது. கடந்த ஆண்டு ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் எடுக்கு வரவுள்ளது. இந்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் கமிட் ஆன படம் திரைப்படம் ‘கூலி’. இது, இவரது 171வது படமாகும். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார், மேலும் படத்திற்கு வழங்கப் போல அனிருத் இசையமைக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கூலி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்:
இதனிடையே கூலி படத்தின் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானதுடன், டிரெண்ட் ஆகி வைரலானது. அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த், தனது பழைய படத்தில் பேசிய ஒரு வசனம் இடம்பெற்று இருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்தது. அது மட்டுமன்றி, இந்த டீசர் மூலம் இது ஒரு கேங்ஸ்டர் டிராமா படமாக இருக்கும் என்றும் கணிக்க முடிகிறது.

மேலும் படிக்க | வானை தொடும் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல்! இதுவரை எவ்வளவு தெரியுமா?

இந்த டீசரை அடுத்து, லோகேஷ் கனகராஜ் சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்துடன் எடுத்த மிரர் செல்ஃபி ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன் ‘லுக் டெஸ்ட்’ முடிந்து விட்டதாகவும், ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறியிருந்தார். கூறியது போலவே, கூலி படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. 

ரஜினியுடன் ஸ்ருதிஹாசன்:
ஒரு பக்கம் சூட்டிங் நடந்து வரும் நிலையில், கமல்ஹாசனின் மகள் இதில் நடிக்கயுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின, அதனுடன் ரஜினிக்கு மகளாக கூலி படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

ரஜினியுடன் மிரட்ட வரும் மலையாள சூப்பர் நடிகர்:
இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் ஏற்கனவே விக்ரம் படத்தில் நடிகர் கமலுடன் நடித்த ஃபஹத் பாசில் தற்போது மீண்டும் லோகேஷ் இயக்கும் கூலி படத்தின் மூலம் ரஜினியுடன் நடிக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இரண்டாவது முறையாக நடிகர் ஃபகத் ஃபாசில் ரஜினியுடன் நடிக்கப் போகிறார். எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News