ராமேஸ்வரத்தில் சூரி தரிசனம் - அலைமோதிய ரசிகர்கள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நகைச்சுவை நடிகர் சூரி குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 17, 2022, 03:51 PM IST
  • சூரி தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்
  • இவர் நடிப்பு மட்டுமின்றி ஹோட்டல் தொழிலும் செய்கிறார்
  • தனது குடும்பத்துடன் ராமேஸ்வரத்தி தரிசனம் செய்தார்
ராமேஸ்வரத்தில் சூரி தரிசனம் - அலைமோதிய ரசிகர்கள் title=

தமிழ் திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சூரி வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பிரபலமடைந்தார். அந்தப் படத்தில் அவர் செய்திருந்த பரோட்டா காமெடி இன்றளவும் பலரால் ரசிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர் பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டுவருகிறார். ஆரம்ப காலத்தில் கடுமையான கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியினாலும், திறமையாலும் கோலிவுட்டின் முக்கியமான காமெடி நடிகராக சூரி வலம் வருகிறார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சூரி ந்டித்திருக்கிறார். மேலும் தற்போது எந்தத் திரைப்படம் வெளியானாலும் அதில் நிச்சயம் சூரி இருப்பார் என்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் படிக்க | ஓசிலதானே படம் பார்க்குறீங்க?... பேரரசு கேள்வியால் அதிர்ந்துபோன பத்திரிகையாளர்கள்

இவர் சமீபத்தில் விருமன் படத்தில் நடித்திருந்தார். மேலும் பல படங்களில் நடித்துவருகிறார். நடிப்பு மட்டுமின்றி தொழிலில் ஈடுபட்டுவரும் சூரி, மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஹோட்டலையும் நடத்திவருகிறார்.

மேலும் படிக்க | ஷங்கர் சார் மன்னிச்சிடுங்க... அதிதி எனக்கு தங்கச்சிங்க - பல்டி அடித்த கூல் சுரேஷ்

அவரது ஹோட்டலுக்கும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் நடிப்பு ஒரு பக்கம், பிஸ்னஸ் ஒரு பக்கம் என சூரி தற்போது பயங்கர பிசி.

Soori

இந்நிலையில், நடிகர் சூரி  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சாமி கும்பிட வருகை தந்தார். அவரது வருகையையொட்டி ரசிகர்கள் தொந்தரவு இன்றி அவர் சாமி கும்பிடுவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனையடுத்து ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு  சென்ற சூரி தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் பெற்று திரும்பினார்.

மேலும் படிக்க | வாரிசு இயக்குனரின் ஸ்டிரிக்ட் உத்தரவு; ஆடிப்போன படக்குழு

சூரியின் வருகையை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் அவருடன் செல்ஃபி எடுப்பதற்காக முண்டியடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. காவல் துறையினர் ரசிகர்களை கட்டுப்படுத்தி சூரியை அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் ட்ரெய்லர்... வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News