மிகப்பெரிய சாதனை, விஜய்யின் தெறி பாடல் வேற லெவல் ஹிட்

விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : May 23, 2021, 04:19 PM IST
மிகப்பெரிய சாதனை, விஜய்யின் தெறி பாடல் வேற லெவல் ஹிட்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’. இந்த படத்தின் தளபதி விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் பாடல்கள் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வரவேற்பை பெற்றன. 

விஜய்‌ (Vijay) போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கிய ‘தெறி’ (Theri) படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்தவகையில் கடந்த ஆண்டும் இப்படத்தில் இடம்பெற்ற ‘என் ஜீவன்’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது அப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

ALSO READ | தளபதி 65 படப்பிடிப்பு வேண்டாம்: விஜய் அதிரடி முடிவு, காரணம் என்ன?

கேரளாவில் எடுக்கப்பட்ட விஜய்‌ மற்றும் நைனிகா பகுதி அனைவரையும் கவர்ந்திருந்தனர். அந்த வகையில் ‘தெறி’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஈனா மீனா டிகா’ (Eena Meena Teeka) பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த பாடல் தற்போது யூடியூப்பில் 100 மில்லியன் வியூக்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த பாடலுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.

 

 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News