குஷி செய்தி! "சர்கார்" படத்தின் டீசர் குறித்து முக்கிய தகவல்!!

தளபதி விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் டீசர் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Updated: Oct 10, 2018, 03:49 PM IST
குஷி செய்தி! "சர்கார்" படத்தின் டீசர் குறித்து முக்கிய தகவல்!!

தளபதி விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் டீசர் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

 

 

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

துப்பாக்கி, கத்தி திரைப்படத்திற்கு அடுத்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் AR முருகதாஸ் இப்படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் விஜய்-ன் 62-வது திரைப்படமான இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் அரசியல் கருத்துக்களை தாங்கி வருவதாக நடிகர் விஜய்யே வெளிப்படையாக சர்கார் குறித்து ஆடியோ வெளியிட்டு விழாவில் தெரிவித்திருந்தார், இதனால் இந்த படத்தின் ஒவ்வாரு அப்பேட் தகவலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.  

இந்நிலையில் சர்கார் படத்தின் டீசர் வரும் அக்டோபர் 19ம் தேதி மாலை 6மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.