Ammu Abhirami : காதலனை அறிமுகப்படுத்திய அம்மு அபிராமி! அட..இவரு நம்ப ஆளாச்சே..

Ammu Abhirami Boyfriend : தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அம்மு அபிராமி தனது காதலனை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jun 10, 2024, 06:30 PM IST
  • குழந்தை கதாப்பத்திரமாக அறிமுகமானவர் அம்மு அபிராமி
  • தனது காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்
  • அவர் யார் தெரியுமா?
Ammu Abhirami : காதலனை அறிமுகப்படுத்திய அம்மு அபிராமி! அட..இவரு நம்ப ஆளாச்சே.. title=

Ammu Abhirami Boyfriend : கோலிவுட் உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் அம்மு அபிராமி. தமிழில், பைரவா படம் மூலம் அறிமுகமான இவர் கவனிக்கத்தக்க பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 

அம்மு அபிராமி: 

விஜயுடன் முதல் படத்தில் நடித்திருந்தாலும் இவரை அனைவரிடத்திலும் பிரபலமாக்கியது, ராட்சசன் திரைப்படம் தான். இந்த படத்தில் ‘அம்மு’ இன்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் இவருக்கு அம்மு அபிராமி என்றே பெயர் வந்தது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அதே கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன்னரே ஏன் ஆளோட செருப்ப காணோம் படத்திலும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு தங்கையாகவும் நடித்திருக்கிறார். 

இந்த படங்களை அடுத்து அவரை பெரிய உயரத்திற்கு கொண்டு சென்ற படம், அசுரன். இந்த படத்தில் அவர், நடிகர் தனுஷிற்கு முறை பெண்ணாக நடித்திருப்பார். இவரது அகல விழிகளும், அழகான வசன உச்சரிப்பும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருந்தன. இதை அடுத்து அவர் தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

எல்லா படங்களிலும் மரணம்! 

ஒரு சில நடிகைகளை எந்த படத்தில் நடிக்க வைத்தாலும் அதன் இயக்குனர்கள் அவர்களின் கதாபாத்திரத்தை இறுதியில் கொன்றுவிடுவர். அதுபோல, அபிராமியை எந்த படத்தில் நடிக்க வைத்தாலும் அவரது கதாபாத்திரத்தை இறுதியில் கொன்று விடுகின்றனர். ராட்சசன் படத்திலும் சரி, அதற்கு முன்னர் அவர் நடித்த துப்பாக்கி முனை படத்திலும் சரி அனைத்திலும் அவருக்கு மரணம் தான். அசுரன் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதுவே பின்னாளில் இவரது கிரேட் மார்காகவும் மாத தொடங்கியது. 

மேலும் படிக்க | புகைப்படங்கள்: பார்வையால் அனைவரையும் கிறங்க வைக்கும் நடிகை அம்மு அபிராமி

குக் வித் கோமாளி பங்கேற்றார்:

தமிழில் இருக்கும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி, குக் வித் கோமாளி.  சமைக்கத் தெரிந்த சில பிரபலங்களும் சமையல் என்றால் என்னவென்றே தெரியாத சில காமெடி கலைஞர்களும் சேர்ந்து சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். சமையலைத் தாண்டி ரசிகர்களை சிரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் அம்மு அபிராமி முக்கிய பங்கேற்பாளராக கலந்து கொண்டார். இதில், நன்றாக சமைத்து பாராட்டுகளையும் பெற்ற அந்த செட்டிலேயே சில நட்பு வட்டாரங்களையும் ஏற்படுத்திக் கொண்டார். அப்படிப்பட்ட ஒரு நண்பருடன் தான் அவர் காதல் வயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இவருதான் அவரா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களுக்கும் இயக்குனராக இருந்தவர் பார்த்தீவ் மணி. இவருக்கு இன்று பிறந்தநாள். இதை அடுத்து குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர்கள் உட்பட பல பேர் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அம்மு அபிராமியும் இவருக்காக ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அதில் “பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி” என்று ஹார்ட் இமோஜியுடன் குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமன்றி, ‘P’ என்ற எழுத்து பொறித்த லாக்கெட்டையும் அணிந்திருக்கிறார். இதனால், இவர்களின் காதலை ரசிகர்கள் கிட்டத்தட்ட கன்ஃபார்ம் செய்து விட்டனர். 

மேலும் படிக்க | என்னது எனக்கு திருமணமா?... அம்மு அபிராமி கொடுத்த விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News