ஆதார் தொடர்பான வழக்கு தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் நிறுவனங்கள் ஆதார் கட்டாயம் என நிர்பந்திக்கக் கூடாது என்றும் ஆதார் கொண்டு வந்ததற்கான நோக்கம் சரியானது. அரசு நலத்திட்டங்களில் ஆதாரை அவசியமாக்குவதன் மூலம் போலிகளை களைய உதவும். அதே நேரத்தில் ஆதார் இல்லை என்பதற்க்காக அவரது உரிமைகள் மறுக்கப்பட கூடாது. செல்போன் இணைப்பு, வங்கிக்கணக்கு ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை. ஆதார் இல்லையென்றாலும் அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்க வங்கிகள் அனுமதிக்க வேண்டும். ஆனால் வருமான வரி கணக்கு, பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதுக்குறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்கி கணக்குக்கு ஆதார் தேவையில்லை. ஆனால் பான் கார்டு தேவை. பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம். அப்படின்னா, தலையை சுத்தி மூக்கை தொட்டு கடைசியிலே ஆதார் கட்டாயம்னு..." உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என சுட்டிக்காட்டி உள்ளார்.
#AadhaarVerdict வங்கி கணக்குக்கு ஆதார் தேவையில்லை. ஆனால் பான் கார்டு தேவை. பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம். அப்படின்னா, தலையை சுத்தி மூக்கை தொட்டு கடைசியிலே ஆதார் கட்டாயம்னு...
— Kasturi Shankar (@KasthuriShankar) September 26, 2018