வசூலில் அடிவாங்கிய லால் சலாம் படம்.. வெறும் இத்தனை கோடி தானா?

Lal Salaam Box Office Collection: பெரிய எதிர்பார்ப்பில் வெளியான லால் சலாம் திரைப்படத்தின் தற்போதைய வசூல் நிலவரம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 27, 2024, 12:52 PM IST
  • லால் சலாம் திரைப்படத்தின் வசூல் விவரம்.
  • உலக அளவில் ரூபாய் 32 கோடி வசூல் செய்துள்ளதாம்.
வசூலில் அடிவாங்கிய லால் சலாம் படம்.. வெறும் இத்தனை கோடி தானா? title=

Rajinikanth Lal Salaam Box Office Collection : ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் முழு விவரத்தை இந்த பதிவில் காண்போம்.

லால் சலாம் திரைப்படம்:
ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) கேமியோ ராேலில் நடித்துள்ள திரைப்படம், லால் சலாம். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டார் நடித்துள்ளனர். இப்படம், கடந்த 9ஆம் தேதி (பிப்ரவரி) வெளியளாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. ரஜினிகாந்த், இதில் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கேமியோ ரோலாக இருந்தாலும் இவருக்கு இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் கிரிக்கெட் வீரர்களாக நடித்துள்ளனர். கிரிக்கெட் வீரர் கபில் தேவ்வும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் வருகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் படிக்க | Actor Sivakumar: ‘மீண்டும் மீண்டுமா..’ ரசிகர் கொடுத்த பொன்னாடையை தூக்கியெறிந்த சிவகுமார்..வைரல் வீடியோ!

தனுஷ் நடிப்பில் வெளியான 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மூன்றாவதாக லால் சலாம் (Lal Salaam) படத்தை இயக்கியிருந்தார். கிரிக்கெட் விளையாட்டை வைத்து நடத்தப்படும் மத அரசியலை வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைந்தது. படம், வெளியான முதல் நாளில் இருந்து சுமாரான விமர்சனங்களை பெற்றது.

லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்:
லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி முதல் நாளில் உலகளவில் ரூ.4 காேடி வரை கலெக்ட் செய்தது. இரண்டாம் நாளில், மொத்தம் சுமார் 3 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மூன்றாம் நாளில் (Lal Salaam Box Office Collection Day 3) உலகளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. 

அடிவாங்கிய லால் சலாம் வசூல்:
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, லால் சலாம் (Lal Salaam Box Office Collection Detail) திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 32 கோடி வசூல் செய்துள்ளதாம்.

லால் சலாம் திரைப்படத்தின் விமர்சனம்:
லால் சலாம் திரைப்படத்தில் மத அரசியல் குறித்து பேசியுள்ள கருத்துகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. கூற வந்த கருத்தை இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் நேர்த்தியுடன் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்திருந்தனர். முதல் பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதாகவும், ரஜினியின் எண்டிரிக்கு பிறகு படம் சூடு பிடிப்பதாகவும் கருத்துகள் எழுந்தது.

லால் சலாம் படம் எந்த ஓடிடி தளத்தில் ரிலீஸ்?
இதனிடையே லால் சலாம் படத்தின் டிஜிட்டல் உரிமையினை, நெட்ஃப்ளிக்ஸ் தளம் வாங்கியுள்ளது. இப்படம் எப்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது என்பது குறித்த அறிவிப்பு, இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Actor Prabhas: லண்டன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் பிரபாஸ்! இவ்வளவு பெரிய ஸ்டாருக்கு இப்படியொரு நிலைமையா..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News