அஜித் தன் கைப்பட எழுதிய கடிதம்! யாருக்காக தெரியுமா?

அஜித் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - RK Spark | Last Updated : Apr 1, 2022, 11:25 AM IST
  • அஜித் தற்போது கேரளாவில் உள்ளார்.
  • அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • அஜித்தின் அடுத்த படம் ஏப்ரல் 2ம் வாரத்தில் வெளியாக உள்ளது.
அஜித் தன் கைப்பட எழுதிய கடிதம்! யாருக்காக தெரியுமா? title=

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அஜீத் நடிப்பில் வெளியான திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கடைசியாக அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு விஸ்வாசம் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படம் ஒரு பெரிய பேங்க் ராபரியை மையப்படுத்தி இருக்கும் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர் இதுதான்! வெளியான தகவல்

ajith

இந்த படத்திற்காக அஜீத்தின் புதிய கெட்டப் மிகப் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மிக நீண்ட வெள்ளை தாடியுடன் அஜித்தின் புகைபடங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியானது.  சமீபத்தில் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் இருக்கும்படியான படங்கள் வெளியானது.  கடந்த இரண்டு நாட்களாக அஜித் கேரளாவில் உள்ள கோயில்களுக்கு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. நேற்று அஜித் கோவிலில் இருக்கும் படியான புகைப்படங்கள் வெளியானது. 

ajith

இந்நிலையில் தற்போது அஜித் தன் கைப்பட எழுதியுள்ள ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. அதில் அஜித் கேரளாவில் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மையத்திற்கு நன்றி தெரிவித்து எழுதியுள்ளார்.  அஜித் ரசிகர்கள் இந்த கடிதத்தை சமூக ஊடக தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  அஜித் வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ஏப்ரல் 2வது வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்க | அதிர்ச்சி தகவல்! சூர்யாவின் இந்த படமும் ஓடிடி ரிலீஸ்?

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News