நடிகர் அஜித், ரஷ்யாவில் தனது வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும் அவர் தற்போது அங்கேயே சில நாட்கள் தங்கி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. அவர் ரஷ்யாவில், பைக் மூலம் 5 ஆயிரம் கிலோமீட்டர் சுற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தில் இடம்பெற்ற யுவன்சங்கர் ராஜா இசையில் நாங்க வேற மாதிரி பாடல் வெளியானது.
"தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு! வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு என்ற பாடல் வரியினை குறிப்பிட்டு" தமிழில் அர்ச்சனை குறித்து அன்றே கணித்துள்ளார் நம்ம தல அஜீத் என்று அவரது ரசிகர்களும், நெட்டிசன்களும் சமூக வலை தளங்களில் இந்தப் பாடலை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
"நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் வலிமை திரைப்படம் இறுதிக்கட்ட பட்பிடிப்பை நெருங்கியுள்ளது.ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வலிமை திரைப்பபடம் வெளியாகும் நாளும் தற்போது கிடைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.