புத்தர் கோவிலில் வழிபாடு.. திறந்தவெளியில் சாப்பாடு; அஜித்தின் லேட்டஸ்ட் டிரிப் வீடியோ

வட இந்திய பைக் டிரிப்பில் இருக்கும் நடிகர் அஜித், புத்தர் கோவிலில் வழிபாடு முடித்தவுன் திறந்தவெளியில் கூலாக அமர்ந்து சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 13, 2022, 11:08 AM IST
  • பைக் டிரிப்பில் இருக்கும் அஜித்குமார்
  • புத்தர் கோவிலில் வழிபாடு நடத்தினார்
  • இணையத்தில் லீக்கான வீடியோ
புத்தர் கோவிலில் வழிபாடு.. திறந்தவெளியில் சாப்பாடு; அஜித்தின் லேட்டஸ்ட் டிரிப் வீடியோ title=

பைக் ரைடிங் மீது அலாதி பிரியம் கொண்டிருக்கும் நடிகர் அஜித், அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் பைக் மூலம் சுற்றிப் பார்த்து வருகிறார். பட ஷூட்டிங்கிற்கு இடையே கிடைக்கும் இடைவெளியில் ஜாலியாக டிரிப் பிளான் போட்டு செல்லும் அவர் தற்போது வட இந்திய பயணத்தில் பிஸியாக இருக்கிறார். லே மற்றும் லடாக் பகுதியில் முகாமிட்டிருக்கும் அஜித், அங்குள்ள அனைத்து பகுதிகளுக்கும் பைக் வழியாகவே பயணித்து வருகிறார். அண்மையில் அவர் லே லடாக் சென்ற வீடியோக்கள் வெளியாகியிருந்தன. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் புத்தர் கோவிலில் வழிபாடு செய்கிறார்.

மேலும் படிக்க | அனுஷ்காவிற்கு பிடித்த சீரியல் நடிகை இவர்தானாம்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

அதன்பின் தங்கும் இடத்துக்கு சென்ற அவர் திறந்த வெளியில் ஜாலியாக நண்பர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிடுகிறார். இந்த இரண்டு வீடியோவையும் அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளனர். சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் அஜித், ஏகே 61 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து படம் உருவாகிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சூட்டிங் நடத்தப்பட்டிருக்கும் நிலையில், இறுதிக் கட்ட சூட்டிங் பாங்காங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம்.

அங்கு செல்வதற்கான இடைவெளியில் தான் இப்போதைய பைக் டிரிப்பை பிளான் செய்து சுற்றிக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். பாங்காங்கில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். வங்கிக் கொள்ளை கதை என்பதால் அங்கு எடுக்கப்படும் சண்டைக் காட்சிகள் உலக தரத்தில் எடுக்கப்பட இருக்கிறதாம். அதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழு செல்வதற்கான விசா உள்ளிட்ட ஏற்பாடுகள் முடிந்தவுடன், அங்கு சென்று எஞ்சிய காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. வலிமை எதிர்பார்த்த வசூலை கொடுக்காத நிலையில், இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பூர்த்தி செய்யும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் படிக்க | ஜெயிலர் படத்தில் நான் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் ஹீரோயினின் பளிச் பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News