அஜித்-கொடுத்த அடுத்த பட கால்ஷிட்: யாருக்கு தெரியுமா?

அஜித்துடன் படம் பண்ண பல முன்னணி தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் அஜித் தற்போது, சத்யஜோதி நிறுவத்திற்கு இரண்டாவது முறையாக கால்ஷிட் கொடுத்துள்ளார். 

Last Updated : Mar 15, 2018, 05:41 PM IST
 அஜித்-கொடுத்த அடுத்த பட கால்ஷிட்: யாருக்கு தெரியுமா? title=

அஜித்துடன் படம் பண்ண பல முன்னணி தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் அஜித் தற்போது, சத்யஜோதி நிறுவத்திற்கு இரண்டாவது முறையாக கால்ஷிட் கொடுத்துள்ளார். 

நடிகர் அஜீத்குமார் 4வது முறையாக டைரக்டர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் என்ற படத்தில் தற்போது, நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், நடிகர் அஜீத்குமார்-ன் அடுத்த படம் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், கஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு அஜித் கால்ஷிட் தருவதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், போனிகபூர் தயாரிப்பு ஸ்டைலே வேறு, அவர் படம் ஆரம்பிக்கும் போது ஒன்று சொல்வார், படம் முடியும் போது வேறு சொல்வார் என பலரும் அஜித்தை எச்சரித்துள்ளனர்.

அதற்கு அஜித் ‘நான் பணத்திற்காக இந்த படம் செய்யவில்லை, நல்ல நட்பிற்காக தான் செய்ய முன் வந்துள்ளேன்’ என்று கூறியுள்ளாராம். 

Trending News