அஜித்தின் துணிவு: ரிலீஸ் தேதி அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Thunivu Release Date: துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 4, 2023, 08:00 PM IST
  • அஜித் ரசிகர்களுக்கு மாஸ் செய்தி.
  • துணிவு ரிலீஸ் தேதி அறிவிப்பு.
  • இதை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அஜித்தின் துணிவு: ரிலீஸ் தேதி அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்  title=

அஜித் ரசிகர்களுக்கு மாஸ் செய்தி. துணிவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடிக்கும் துணிவு படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வந்ததை அடுத்து அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர். 

அஜித்தின் துணிவு பட டிரைலர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புத்தாண்டு அன்று 'துணிவு ட்ரெய்லரை இதுவரை 20 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர்' என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும் படிக்க | ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்துக்குள் துணிவின் சாதனை - ஆச்சரியத்தில் கோலிவுட்

இந்த நிலையில், விஜயின் வாரிசு படத்தில் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு  வெளியாகி சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் படத்தின் ட்ரைலர் வெளியாகி சில மணி நேரங்களில் அஜித்தின் துணிவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது, அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் பரபரபையும் ஏற்படுத்தியுள்ளது. 

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சுவாரியர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், ஜான் கொக்கன் என பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | நம்ம பவர் அந்த ரகம் - வெளியானது வாரிசு ட்ரெய்லர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News