உங்கள் ரசிகனாக, சினிமா ஆர்வலராக... கமலிற்கு கோரிக்கை வைத்த பிரேமம் இயக்குனர்!

மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க கோரி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கமலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 31, 2022, 10:03 AM IST
  • மருதநாயகம் படத்தை எடுக்க கோரி அல்போன்ஸ் புத்திரன் கோரிக்கை.
  • தனது பேஸ்புக் மூலம் கமல்ஹாசனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
  • மருதநாயகம் படம் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது.
உங்கள் ரசிகனாக, சினிமா ஆர்வலராக... கமலிற்கு கோரிக்கை வைத்த பிரேமம் இயக்குனர்! title=

நேரம், பிரேமம் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் இயக்குனர் அல்போன்ஸ் பத்திரம். சாதாரண கதையை வித்தியாசமாக படம் எடுப்பதில் இவர் வல்லவர். தற்போது ப்ரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து கோல்ட் (GOLD) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.  மலையாள சினிமா மட்டுமின்றி இந்திய திரை உலகில் உள்ள கதாநாயகன்களும் இவர் இயக்கத்தில் நடிக்க ஆவலாக உள்ளனர்.  சிறிது நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் மகனுக்கு ஒரு கதை கூறி உள்ளார்.  விஜய் தனது பேட்டியில் இந்த தகவலை கூறி இருந்தார்.

மேலும் படிக்க | மீண்டும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறப்போகும் பிரியங்கா சோப்ரா?

இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் கமல்ஹாசனுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில் மருதநாயகம் படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்க வேண்டும், அதனை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். உங்களது ரசிகனாக, சினிமா காதலனாக வேண்டி விரும்பி இதனை கேட்டுக்கொள்கிறேன்.  உண்மையாக ஆழ் மனதில் இருந்து நினைத்தால் அதனை செய்து முடிக்க இந்த பிரபஞ்சமே உதவியாக இருக்கும். நீங்கள் இந்த பிரபஞ்சத்தின் ஹீரோ, உங்களால் முடியும் என்று பதிவிட்டு உள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மருதநாயகம் படம் சில பல காரணங்கள் கைவிடப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறையாமல் உள்ளது. அதன் பிறகு கமல் பல படங்களை இயக்கி நடித்திருந்தாலும் மருதநாயகம் படத்தை பற்றி அவரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு தான் வருகிறது. சமீபத்தில் கமல் நடித்த விக்ரம் படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.  

maruthanayagam

மேலும் படிக்க | வாரிசு படத்தின் அப்டேட்டுகளை அள்ளி வீசிய சரத்குமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News