சமீபத்தில் நடிகை டாப்சி அளித்த பேட்டியில் ஒரு தெலுங்கு படத்தில் தனது தொப்புள் மீது தேங்காயை வீசியது போல ஒரு காட்சி எடுத்தது பற்றி குறிப்பிட்டு இருந்தார். இது பிரச்சினை ஆனதால் சம்பந்தப்பட்ட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் டாப்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எமி ஜாக்சன் அளித்த பேட்டி:-
தொப்புளில் தேங்காயை வீசுவது கொடுமை. தயவு செய்து இதையெல்லாம் செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். எனக்கு இப்படி யாராவது செய்தால் தேங்காயை எடுத்து அவர்கள் மீது வீசி திருப்பி அடிப்பேன்.
நான் அருமையான இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். அது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே, எனக்கு யாரும் அப்படி செய்ய மாட்டார்கள். இது போன்று நடப்பது எனக்கு பிடிக்காது” என்று பேட்டி அளித்தார்.