விஜய் vs அஜித் ரசிகர்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தப்போகும் அனிரூத்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 67' மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'ஏகே 62' ஆகிய இரண்டு படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Nov 7, 2022, 07:15 AM IST
  • வாரிசு முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியானது.
  • துணிவு முதல் பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.
  • அனிருத் இரண்டு படங்களிலும் பாடல் பாடி உள்ளார்.
விஜய் vs அஜித் ரசிகர்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தப்போகும் அனிரூத்? title=

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக இருக்கும் நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் படங்களும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி திரையரங்குகளை தெறிக்கவிட போகிறது, சாதாரணமாகவே சமூக வலைத்தளங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தங்களது ஹீரோ தான் கெத்து என்று கூறி வெட்டி சண்டை போட்டு இணையதளத்தை போர்க்களமாக மாற்றி வருவார்கள்.  இப்போது இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் முட்டிக்கொள்ள இருப்பதால் இரு நடிகர்களின்  ரசிகர்களும் செய்யும் அலப்பறைகள் பற்றி சொல்லவே வேண்டாம்.  கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு பெரிய பெரிய நட்சத்திரங்களின் படங்களும் களத்தில் சந்திக்கவுள்ளது.  கடந்த 2014ம் ஆண்டு பொங்கல் பண்டிகை சமயத்தில் விஜய்யின் 'ஜில்லா' படமும், அஜித்தின் 'வீரம்' படமும் வெளியானது,

மேலும் படிக்க | மருத்துவமனையில் நடிகை சமந்தா; அரிய வகை தோல் நோயால் பாதிப்பு

விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்குள் கூடிய விரைவில் ஒரு போர் தொடங்கலாம் என்றும் அந்த போருக்கு காரணம் இசையமைப்பாளர் அனிரூத்தாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  அதாவது அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்றும், அந்த பாடலை அனிருத் பாடியிருப்பதாகவும் ‘துணிவு’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்திருந்தார்.  இந்த பாடலாம் நவம்பர் மூன்றாம் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது ஒருபுறமிருக்க மறுபுறம் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி அனைவரையும் ரஞ்சிதம் வைப் ஆட்கொண்டுள்ளது.

இந்நிலையில் 'வாரிசு' படத்தின் இரண்டாம் சிங்கிள் நவம்பர் மூன்றாம் வாரத்தில் வெளியாகும் என சில செய்திகள் வெளியாகியுள்ளது.  அப்படி இதனால் என்ன மோதல் வரப்போகிறது என்றால் இந்தப் பாடலையும்  அனிரூத் தான் பாடியிருக்கிறாராம்.  விஜய் மற்றும் அஜித் இருவரின் படங்களிலும் அனிரூத் பாடியிருப்பதால் இந்த பாடல் வெளியாகும்போது இருதரப்பு ரசிகர்களும் எந்த நடிகரின் பாடல் சிறப்பாக வந்திருக்கிறது என்று ஒப்பிட்டு பார்த்து சண்டையிட ஆரம்பித்துவிடுவார்கள்.  விரைவில் சமூக வலைத்தளம் போர்க்களமாக மாறுவதை காணலாம் என்று கருதப்படுகிறது.  மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 67' மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'ஏகே 62' ஆகிய இரண்டு படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.

மேலும் படிக்க | சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய அனிரூத்: ஏ.ஆர்.ரகுமான் பக்கம் சாய்ந்த லைகா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News