தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, குஷி, சாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருகிறார்.
அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் யசோதா திரைப்படம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில், பதிலுக்கு சமந்தா ரசிகர்களுக்கு ஷாக்கான நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். அரிய வகை தோல் நோய்களில் ஒன்றான இதில் இருந்து விரைவில் குணமடைவேன் என்றும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் டிவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
அந்த பதிவில், " யசோதா டிரெய்லருக்கு உங்கள் வரவேற்பு அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் (Myositis) எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. குணமடைந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குணமடைய நான் எதிர்பார்த்ததை விட அதிக நாள் எடுத்துக் கொள்ளும்போல் தெரிகிறது.
— Samantha (@Samanthaprabhu2) October 29, 2022
நாம் எப்பொழுதும் வலுவான நிலையில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை நான் பொறுமையாக உணர்கிறேன். இந்த நோயில் இருந்து குணமடைய இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனக்கு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தன. இன்னும் ஒரு நாளை என்னால் சமாளிக்க முடியாது என நினைக்கும்போது கூட அந்த நிமிடம் எப்படியோ கடந்து செல்கிறது. என்னுடைய கணிப்பின் படி ஒரு நாளில் குணமடைவதை நெருங்கி விட்டேன் என நினைக்கிறேன். இதுவும் கடந்து போகும்" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பதிவிற்கு பிறகு அவருடைய ரசிகர்களும் சினிமா பிரபலங்களும், மயோசிடிஸ் நோயில் இருந்து விரைவில் குணமடைய பிரார்தனைகளையும், வாழ்த்துகளையும் அனுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க | கமலால் கடனாளி ஆனேனா?... முற்றுப்புள்ளி வைத்த லிங்குசாமி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ