பீஸ்ட் கொண்டாட்டம், மக்களுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கிய விஜய் ரசிகர்கள்

பீஸ்ட் திரைப்படம் வெளியானதை கொண்டாடும் விதமாக மயிலாடுதுறை விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கினர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 13, 2022, 12:42 PM IST
  • பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது
  • பீஸ்ட் ட்விட்டர் விமர்சனம்
  • பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்
பீஸ்ட் கொண்டாட்டம், மக்களுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கிய விஜய் ரசிகர்கள் title=

தமிழகம் முழுவதும் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் விஜய்யின் முதல் பான் - இந்தியா ரிலீஸ் படம் எனும் சிறப்பையும் பெற்றுள்ளது. இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளிலும் இப்படம் வெளியாகி உள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அத்துடன் இதில் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க | கத்தார், குவைத்தை தொடர்ந்து தமிழகத்திலும் 'பீஸ்ட்'க்கு தடை - ரசிகர்கள் அதிர்ச்சி!

இதற்கிடையில் பெரும்பாலான திரையரங்குகளில் இன்று அதிகாலை 4 மணிக்கு பீஸ்ட் திரைப்பட ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கம், ராஜேஸ்வரி திரையரங்கம், வெற்றி திரையரங்கம், காசி திரையரங்கம் உள்ளிட்ட பல திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் ஆரம்பமாகி உள்ளன. இதற்கிடையில் சென்னை குரோம்பேட்டில் உள்ள வெற்றி தியேட்டரில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் காட்சியை இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நாயகி பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர் அதிகாலை காட்சியை கண்டனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மயிலாடுதுறையில் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. திரைப்படத்தை காண ஏராளமான விஜய் ரசிகர்கள் திரையரங்குகள் முன் குவிந்தனர். இரண்டு திரையரங்குகளிலும் ரசிகர்களுக்காக 5 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. 

அத்துடன் இரண்டாவது காட்சி தொடங்குவதற்கு முன்பாக, திரையரங்கம் முன்பு விஜய் மக்கள் இயக்கத்தினர் மீண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்கம் முன்பு தலைமைச் செயலகத்தில் விஜய் இருப்பதைப் போன்று பொருத்தப்பட்டிருந்த பேனரின் கீழ் இனிப்பு வழங்கி கொண்டாடிய தளபதி மக்கள் இயக்கத்தினர், வழக்கம்போல் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை தவிர்த்து, அதற்கு பதிலாக ஏழை மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கி கொண்டாடினர். மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | பீஸ்ட் பார்த்த 100 பேருக்கு இலவச பெட்ரோல் வழங்கிய விஜய் ரசிகர்கள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News