ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கண்ணம்மா; வீடியோ வைரல்

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக ரோஷினிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 16, 2021, 01:54 PM IST
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கண்ணம்மா; வீடியோ வைரல்

தமிழ் cயில் பரபரப்பாகப் பேசப்படும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சீரியலின் நாயகி ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

டிஆர்பி ரேட்டிங்கில் பெரும்பாலும் முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியலின் வெற்றிக்கு ரோஷினிக்கு அதிக பங்கு உண்டு. தற்போது இந்த சீரியலில் (Bharathi Kannamma) இருந்து விலகியுள்ள இவருக்கு பதிலாக வினுஷா எனும் புதிய நடிகையைத் தேர்வு செய்திருக்கின்றனர். 

ALSO READ | Kaathu Vaakula Rendu Kaadhal: வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக ரோஷினிக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் கிடைத்துள்ளது. எனவே அதனால்தான் அவரை சீரியல் இருந்து விலகுவதாகவும் கூறப்பட்டது.  அதன்படி பாரதி கண்ணம்மா சீரியலில் தனது கடைசி நாளை, தன்னுடைய சக நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனருடன் ரோஷினி ஹரிபிரியன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

தற்போது ரோஷினி முதல்முறையாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

பாரதி கண்ணம்மா தொடரில் ஒரு சில காரணங்களால் என்னால் தொடர முடியவில்லை, என்னுடைய இந்த முடிவு உங்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றும், உங்கள் ஆதரவு இல்லாமல் இவ்வளவு தூரம் என்னால் வந்திருக்க முடியாது என்றும், எதிர்காலத்திலும் இதே போன்ற ஆதரவு எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

 

ALSO READ | விரைவில் முக்கிய அறிவிப்பு, நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News