தமிழகத்தை தாண்டி இந்திய அளவில் பெரிய டாப்பிக்காக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ். விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைப்பெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட உள்ள போட்டியாளர் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7:
2017ஆம் ஆண்டு தமிழில் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த மாதம் (அக்டோபர்) 1ஆம் தேதி ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி, தற்போது 40வது நாளை எட்டியுள்ளது. இதில், வலுவான போட்டியாளர்களாக கருதப்பட்ட சிலர் போட்டியை விட்டு வெளியேறியுள்ளனர். உள்ளிருக்கும் போட்டியாளர்களும் பெரிதாக மக்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதில்லை. அப்படி பெரிதாக வெளியில் தெரியாத போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். ஆனால் இந்த வாரம், வலுவான போட்டியாளராக மக்களால் கருதப்படும் ஒருவர் வெளியேற இருக்கிறார்.
இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்..
பிக்பாஸ் இல்லத்தில் வந்த முதல் நாளிலேயே சக போட்டியாளர்களின் ஆதரவையும்-எதிர்ப்பையும் பெற்றவர் பூர்ணிமா. டிஜிட்டல் திரையில் நன்றாக அறியப்படும் நபராக இருக்கும் இவர், பிக்பாஸ் போட்டியிலும் பல லட்சம் மக்களின் ஆதரவை பெற்றார். போட்டியாளராக இருந்த போதும், பிக்பாஸ் இல்லத்தின் கேப்டானாக இருந்த போதும் பூர்ணிமா நல்ல பெயரையே பெற்றார்.
ஆனால், பிரதீப்பின் ரெட் கார்டு விஷயத்திலும் புதிதாக வைல்ட் கார்டு மூலம் போட்டிக்குள் நுழைந்தவர்களை சரியாக நடத்தாத விஷயத்திலும் இவர் மீது பலருக்கு எதிர்ப்பும் அதிருப்தியும் கிளம்பியது. கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் இல்லத்தில் நடந்த டாஸ்குகளும் பூர்ணிமாவை நோஸ் கட் செய்யும் வகையிலேயே இருந்தன. பிக்பாஸ் வாக்கெடுப்பு மட்டுமன்றி, பிற இணையதளங்களும் அது போன்ற சில வாக்கெடுப்புகளை நடத்தி வருகின்றன. அதில், பூர்ணிமாவிற்குதான் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளன.
இவரும் வெளியேறலாம்..
பூர்ணிமாவை அடுத்து குறைவாக வாக்குகளை பெற்றுள்ள இன்னொரு போட்டியாளர், ஐஷு. இவர், கடந்த சில வாரங்களாக இன்னொரு போட்டியாளரான நிக்ஸனுடன் பழகி வருகிறார். அப்படி பழகுகையில் இவர் சில சமயங்களில் வரம்பு மீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரும் மாயா குழுவில் ஒருவராக இருந்து புதிதாக வைல்டு கார்டு மூலமாக உள்நுழைந்தவர்களிடம் சண்டை போட்டார். இதனாலும் ஐஷூ மீது பலருக்கு வெறுப்பு வந்தது. இவரும் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
மீண்டும் பிக்பாஸிற்குள் நுழையும் பிரதீப்:
பிக்பாஸ் இல்லத்தில் இருந்து கடந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டவர், பிரதீப் ஆண்டனி. நடிகரான இவர், இந்த சீசன் பிக்பாஸ் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே “இதை விளையாட்டிற்காக செய்கிறேன்..” என்று கூறி பல விஷயங்களை செய்தார். அது பலருக்கு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தியது. கடந்த வாரம், பிரதீப்பால் தாங்கள் பாதுகாப்பு இல்லாதது போல உணர்வதாக சில போட்டியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து “பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு..” அவர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியவுடன் பிரதீப் போட்ட சில ட்வீட்டுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. நேற்று, “நான் பிக்பாஸ் பாேட்டிக்குள் வர வேண்டும் என்றால் என் மீது வீண் பழி சுமத்திய இரண்டு போட்டியாளர்களை நீங்கள் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும்…” என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தை டேக் செய்து ஒரு ட்வீட்டினை வெளியிட்டார். மேலும், “அந்த வாரம் என்னை வீட்டின் கேப்டனாக போட வேண்டும்” என்றும் நிபந்தனை விதித்தார்.
பிரதீப்பின் இந்த ட்வீட்களை பார்த்த ரசிகர்கள் இவர் வைல்ட் கார்ட் மூலம் மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக கூறினர். ஆனால் அவர் தற்போது ஒரு ட்வீட்டினை மீண்டும் வெளியிட்டுள்ளார். அதில் “கேம் ஓவர்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “ரெண்டு கை ரெண்டு கால் இல்லைன்னா கூட கலைஞன் பொழச்சிப்பான் சார், கெட்ட பையன் சார் இவன், வாழ்த்திய மக்களுக்கு என் வாழ்க்கையை வழங்கி விட்டேன், நல்லா இருங்க” போன்ற ஹேஷ் டேக்குகளை அவர் இணைத்துள்ளார். இதனால், பிரதீப் போட்டிக்குள் நுழைய தற்போது வாய்ப்பில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழையும் பிரதீப் ஆண்டனி..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ