‘களவாணி’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான ஓவியா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பின் மிகவும் பிரபலமானார்!
தற்போது, ஓவியா ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘முனி 4’ (காஞ்சனா 3), ‘K2’ ஆகிய 3 படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் ஓவியா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை ‘குளிர் 100°’ புகழ் அனிதா உதீப் இயக்குகிறார். இந்த படத்திற்கு ’90ml’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு இசையமைத்து வரும் இதற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘Nviz எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது.
இப்படம் பெண்களை உயர்த்திப் பிடிக்கும் படம் என்றும், ஆண்களை போல பெண்களும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம் என்று அனிதா உதுப் கூறிவருகிறார். ஓவியா துணிச்சலாக ஆண்களை போன்று தம்மு, தண்ணி பழக்கம் உள்ள பியூட்டி பார்லர் லேடியாக நடித்துள்ளார். இவரைப்போலவே பல சூழ்நிலைகளில் வாழும் 5 பேரும் ஒரே இடத்தில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் வாழ விரும்பும் ஒரு வாழ்க்கையை வாழ்வதாக கதை.
இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இளம் பெண்கள் புகை பிடிக்கும் காட்சியும், மது அருந்தும் காட்சியும் இருப்பதாலும், இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதாலும் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக தணிக்கை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இயக்குனர் அனிதா உதுப்பும் பெருமையோடு ‘A’ சான்றிதழை வெளியிட்டிருக்கிறார்.
#90ml pic.twitter.com/O1tLZpwASo
— Oviyaa (@OviyaaSweetz) February 7, 2019