எலிமினேஷன் கார்டுடன் வந்த கமல்ஹாசன்..! வெளியேறப்போவது இந்த பாடகரா?

பிக் பாஸ் தமிழ் 4, டிவி ரியாலிட்டி ஷோ நாடு முழுவதும் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. நாங்கள் மற்றொரு சுற்று வெளியேற்றத்தை நோக்கி வருகிறோம்.

Last Updated : Nov 1, 2020, 12:11 PM IST
எலிமினேஷன் கார்டுடன் வந்த கமல்ஹாசன்..! வெளியேறப்போவது இந்த பாடகரா? title=

பிக் பாஸ் தமிழ் 4 (Bigg Boss Tamil), டிவி ரியாலிட்டி ஷோ நாடு முழுவதும் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. நாங்கள் மற்றொரு சுற்று வெளியேற்றத்தை நோக்கி வருகிறோம். கடந்த வாரம், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல இருந்த ஆஜித் தன்னுடைய எவிக்ஷன் ஃப்ரீ பாசை வைத்து தம்பித்து விட்டார். ஆனால் இந்த வாரம் கண்டிப்பாக ஒரு போட்டியாளர் வெளியே செல்வது உறுதி.

இந்த வாரம் 11 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்று இருந்தனர். இந்த வார நாமினேஷனில் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.

 

ALSO READ | பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்? இவர்தாங்க மாப்பிள்ளை...

நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் சனம், பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ரியோ, ஜித்தன் ரமேஷ், அனிதா சம்பத் ஆகிய 6 பேரும் அதிக வாக்குகளைப் பெற்று எவிக்‌ஷனில் இருந்து தப்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இவர்களைத் தவிர்த்து மீதமிருக்கும் ஆஜித், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், வேல்முருகன் ஆகிய 5 பேரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மேலும் ஆஜித் மற்றும் வேல்முருகன் இவர்கள் இருவரில் ஒருவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

ALSO READ | Bigg Boss Tamil 4, Written Update: நீ எனக்கு மகனாக வேண்டும்; பாலஜியிடம் கண்கலங்கிய அர்ச்சனா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News