சைகையிலேயே கலக்கிய கமல்... வந்தது பிக்பாஸ் சீசன் 7 வீடியோ - இதோ முழு விவரம்!

Biggboss Season 7: பிக்பாஸ் தொடரின் 7ஆவது சீசன் குறித்த அறிவிப்பு வீடியோவை விஜய் தொலைக்காட்சி தனது X (ட்விட்டர்) பக்கத்தில் இன்று இரவு வெளியிட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 18, 2023, 08:07 PM IST
  • இதனை இன்றிரவு 7.07 மணியளவில் விஜய் தொலைக்காட்சி பகிர்ந்துள்ளது.
  • இதிலும், கமல்ஹாசன் தொகுப்பாளராக செயல்பட உள்ளார்.
  • பிக்பாஸ் சீசன் 7 அடுத்த மாதம் தொடங்கும் என தெரிகிறது.
சைகையிலேயே கலக்கிய கமல்... வந்தது பிக்பாஸ் சீசன் 7 வீடியோ - இதோ முழு விவரம்! title=

Biggboss Season 7: இந்தி தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பார்வையாளர்களை பெற்று பலத்தை வரவேற்பும் கிடைத்த பிக்பாஸ் தொடர் தமிழிலும் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட பிக்பாஸ் தொடர் இதுவரை ஆறு சீசன்கள் நிறைவடைந்துள்ளன. மேலும், ஹாட்ஸ்டாரில் முழுமையாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு சீசனும் முழுமையாக ஒளிப்பரப்பட்டன. கடந்த ஆறாவது சீசனில் சீரியல் நடிகர் அசீம் பட்டத்தை பெற்றிருந்தார்.  

பிக்பாஸ் 7ஆவது சீசன் அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படும் நிலையில், அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்களும் சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவின. அதாவது,  நடிகர் ம.கா.பா ஆனந்த், விஜே பாவனா, நடிகை ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதன், பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உள்ளிட்டோரின் பெயர்கள் கிசுகிசுக்கப்படுகின்றன.

பிக்பாஸ் தொடரின் டிஆர்பி அதிகமாக இருப்பதால் எப்போதும், அத்தொடர் தொடங்கப்பட்டால் மற்ற தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்கள் பெரிதும் டிஆர்பியில் அடிபடும். பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மட்டுமின்றி ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்க முடியும். எனவே, அத்தொடருக்கான பார்வையாளர்களின் வீச்சு அதிகமாவே இருக்கிறது.

மேலும் படிக்க | கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை..ஓடிடியில் இன்று வெளியான படங்களின் லிஸ்ட்!

மற்ற மொழிகளில் தொகுப்பாளர்கள் பெரும் நட்சத்திரங்கள் என்றாலும், தமிழில் நடிப்பு ஜாம்பவான் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தமிழில் பிக்பாஸ் பிரபலமடைந்ததற்கு முக்கிய காரணம் கமல்ஹாசனின் நேர்த்தியான மற்றும் பக்குவமான பேச்சு தான் என்று சொல்ல வேண்டும். தவறுகளை எடுத்துரைப்பதிலும், போட்டியாளர்களின் பிளஸ் பாய்ண்டை சுட்டிக்காண்பிப்பதிலும் கமல்ஹாசனுக்கு நிகர் அவர் தான்.

இத்தகைய எதிர்பார்ப்பும், ரசிக படையும் உள்ள பிக்பாஸ் தொடரின் 7ஆவது சீசன் குறித்த அறிவிப்பு வீடியோவை விஜய் தொலைக்காட்சி தனது X (ட்விட்டர்) பக்கத்தில் இன்று இரவு வெளியிட்டுள்ளது. இது பிக்பாஸ் தொடரின் 7ஆவது சீசன் என்பதால் இன்று இரவு 7 மணி 7 நிமிடங்களில் இந்த வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், கடற்கரையின் பின்னணியில் ஒரு காருடன் நிற்கும் கமல்ஹாசன் 'I Will Be Watching' என்ற பிக்பாஸின் வசனத்தை சொல்லாமல், அவர் ஸ்டைலின் சைகையிலேயே செய்துகாட்டுகிறார். 

இதனால், இளைஞர்கள் முதல் குடும்பத்தலைவிகள் வரை அனைத்து வயதினரும் பிக்பாஸ் தொடரின் இந்த அறிவிப்பு வீடியோவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும், இதில் எப்போது பிக்பாஸ் சீசன் 7 தொடங்கும் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் என மட்டுமே அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு சீசனுக்கும் அதன் லோகோ மாற்றப்படும் நிலையில், இந்த சீசன் 7 நிகழ்ச்சிக்கான புதிய லோகோவும் இந்த வீடியோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இது தம்மன்னாவின் புது ஸ்டைல்! வைரலாகும் புகைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News