வெளிநாடு போகலாம்..! சல்மான் கானுக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்..!

அமெரிக்கா, கனடா மற்றும் நேபாளம் போன்ற வெளிநாடு செல்ல சல்மான் கானுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 17, 2018, 05:44 PM IST
வெளிநாடு போகலாம்..! சல்மான் கானுக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்..! title=

ராஜஸ்தானில் 1998-ம் ஆண்டு ‘ஹம் சாத் சாத் ஹே’ (Hum Saath - Saath Hain) படப்பிடிப்பின் போது அரிய வகை இரண்டு மான்களை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு கடந்த 5-ம் தேதி ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் மற்றும் நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். 

சல்மான்கான் வேட்டையாடிய “கலைமான்” பற்றி தெரிந்துக்கொள்வோம்!!

தீர்ப்பை அடுத்து, சிறைச்சாலை சென்ற சல்மான்கான் சார்பில், அவரது வக்கீல் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். சல்மான்கானின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி கடந்த 7-ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து வீடு திரும்பினார் நடிகர் சல்மான் கான்.

சல்மான் கான்-க்கு ஜாமீன் வழங்கியது ஜோத்பூர் கோர்ட்!

இந்நிலையில், நடிகர் சல்மான் கான் சார்பில் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தர்ர். அந்த மனுவில், அடுத்த மாதம் மே 25-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை வெளி நாடு செல்ல இருப்பதால், அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். 

மான்வேட்டையாடிய வழக்கு: சல்மானுக்கு சிறை!!

இந்த மனு மீதானா வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வெளிநாடு செல்ல சல்மான் கானுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

Trending News