Karthik Subbaraj Movie: மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி அமைத்த பிரபல ஹீரோ

நடிகர் பாபி சிம்ஹா மாற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 7, 2021, 09:47 AM IST
Karthik Subbaraj Movie: மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி அமைத்த பிரபல ஹீரோ title=

கிரண்ராஜ் இயக்கத்தில் கன்னட மொழியில் ஒரு நாயை மையமாக வைத்து உருவாகிருக்கும் படம் ‘777 சார்லி’. இதில் ராக்‌ஷித் ஷெட்டி லீட் ரோலில் நடிக்க உள்ளார். அவரோடு இந்த படத்தில் சங்கீதா ஸ்ரீங்கிரி, ராஜ் ஷெட்டி, டானிஷ் சைட், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்தப்படம் கன்னடத்தில் உருவாகி இருந்தாலும் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். 

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பின் (Tamil Cinema) வெளியீட்டு உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subburaj) தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார். அதேபோல் மலையாள பாதிப்பின் வெளியீட்டு உரிமையை நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றி உள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா, பேட்ட போன்ற படங்களில் நடிகர் பாபி சிம்ஹா (Bobby Simha) நடித்திருந்தார். இதற்கு அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சியான் 60 படத்திலும் பாபி சிம்ஹா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

ALSO READ | D40: ஃபர்ஸ்ட் லுக் - மோஷன் போஸ்டர் அறிவிப்பு!

தெலுங்கு ரிலீஸ் உரிமையை நடிகர் நானி வாங்கியுள்ளார். ரிலீஸுக்கு முன்பே படத்தின் வியாபாரம் தயாரிப்பாளருக்கு நல்ல மகிழ்ச்சியை அளித்துள்ளதால் நிச்சயம் இந்த படம் தியேட்டரில் வெளியானால் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏற்கனவே சில மேக்கிங் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

ALSO READ | நயன்தாராவின் நெற்றிக்கண்: விக்னேஷ் சிவன் அளித்த லேட்டஸ்ட் அப்டேட் இதொ!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News