100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சிம்புவின் மாநாடு படம்; ரசிகர்கள் ஆரவாரம்!

சிம்பு நடித்த ஒரு திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தொடுவது இதுவே முதல்முறை ஆகும் .

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2021, 10:01 AM IST
100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சிம்புவின் மாநாடு படம்; ரசிகர்கள் ஆரவாரம்! title=

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் படம்தான் 'மாநாடு'. 

இப்படத்தில் (Maanadu) சிம்புவிற்கு (Actor Simbu) ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் இந்த படம் டைம் லூப் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததால் அவர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மாநாடு படத்தின் டிரெய்லரை பார்த்த போதே தெரிந்தது. அதேபோல், இவர் வரும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

ALSO READ | 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் வெளியீடு!

இந்த நிலையில் இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகள் அரங்கை நிறைத்தன. அதன் படி இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கும் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது.

maanaadu

அதன்படி தற்போது இந்த படம் வெளியாகி 25 நாட்கள் ஆகி உள்ளது. இந்நிலையில் மாநாடு படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.58 கோடி வசூல் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மற்ற மாநிலங்கள் மற்றும் ஓவர்சீஸ் (உலக அளவில்) சேர்த்து இப்படம் ரூ.97 கோடியை வசூல் செய்துள்ளது. எனவே, விரைவில் இப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையவுள்ளது. சிம்பு நடித்த ஒரு திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தொடுவது இதுவே முதல்முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ALSO READ | ’சிம்பு, வெங்கட்பிரபு அட்ரஸ் வேனுமா?’ பிரேம்ஜி டிவிட், எஸ்.ஜே.சூர்யா ரியாக்ஷன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News